புது பிசினஸ் தொடங்கினார் நடிகர் அஜித்... அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் அஜித் நடிப்பை தாண்டி பைக் ரைடிங் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல முடிவெடுத்த அஜித், அதன் முதல்கட்டத்தை நிறைவு செய்துள்ளார். கடந்தாண்டு இந்தியா முழுவதும் ஓட்டி முடித்த அஜித், கடந்த மாதம் நேபாள் மற்றும் பூட்டானில் பைக் ரைடிங் செய்து அசத்தினார். இந்த நிலையில், தற்போது தன்னைப்போல் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர்களுக்காக புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார் அஜித். அது என்ன என்பதை விளக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தாமதமாகும் STR 48 பட ஷூட்டிங்... புது அப்டேட் உடன் கமல்ஹாசனை சந்தித்த சிம்பு - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.
பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு” என அந்த அறிக்கையில் அஜித் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ரேகா நாயர் உன் பிரெண்ட் எங்கம்மா... பயந்துட்டாரா! பயில்வானை பங்கமாக கலாய்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்