- Home
- Cinema
- தாமதமாகும் STR 48 பட ஷூட்டிங்... புது அப்டேட் உடன் கமல்ஹாசனை சந்தித்த சிம்பு - வைரலாகும் போட்டோஸ்
தாமதமாகும் STR 48 பட ஷூட்டிங்... புது அப்டேட் உடன் கமல்ஹாசனை சந்தித்த சிம்பு - வைரலாகும் போட்டோஸ்
இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும், நடிகர் சிம்புவும், கமல்ஹாசனை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர்.48. சிம்புவின் 48-வது படமான இதனை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்.டி.ஆர் 48 படத்திற்கு தயாராவதற்காக தாய்லாந்து சென்றிருந்த நடிகர் சிம்பு, அங்கு இரு மாதங்கள் தங்கி மார்ஷியல் ஆர்ட்ஸ், உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொண்டார். பின்னர் அண்மையில் லண்டன் சென்று அங்கும் சில பயிற்சிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இது வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். நடிகர் சிம்பு நடிக்கும் முதல் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரேகா நாயர் உன் பிரெண்ட் எங்கம்மா... பயந்துட்டாரா! பயில்வானை பங்கமாக கலாய்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்
எஸ்.டி.ஆர்.48 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், அப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற தகவலை வெளியிடாமல் இருந்து வந்தனர். அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால், ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஐடியாவில் உள்ளார் தேசிங்கு பெரியசாமி.
இந்த அப்டேட் உடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் சிம்பு ஆகியோர் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, எஸ்.டி.ஆர் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ‘பிச்சைக்காரன் 2’... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா?