பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ‘பிச்சைக்காரன் 2’... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா?
விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடித்திருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் பிரம்மாண்ட வசூலை வாரிக்குவித்தது. விஜய் ஆண்டனி கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் பிச்சைக்காரன் அமைந்தது. இப்படம் தமிழைப் போல் தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.
பிச்சைக்காரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தையும் முதலில் சசி தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் வேறு ஒரு படத்தில் அவர் பிசியானதால் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு வெவ்வேறு இயக்குனர்களது கைக்கு சென்றது. பின்னர் யாரும் செட் ஆகாததால், தானே இயக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு, இப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியுள்ளதோடு மட்டுமின்றி இப்படத்தில் ஹீரோவாக நடித்து, இப்படத்திற்கு இசையமைத்து, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு, தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மே 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பிச்சைக்காரன் 2 திரைப்படம். உலகமெங்கும் 1500-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... வரலட்சுமியை ஷங்கர் படத்தில் நடிக்க அனுமதிக்காத சரத்குமார் - அப்பாவின் கண்டிஷனால் பறிபோன 3 பிளாக்பஸ்டர் படங்கள்
பிச்சைக்காரன் முதல் பாகத்திற்கும் 2-ம் பாகத்திற்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லாமல் இருந்ததோடு, திரைக்கதையும் சொதப்பலாக இருந்ததாக இப்படத்திற்கு முதல் நாளே நெகடிவ் விமர்சனங்கள் குவிந்ததால், இப்படத்தில் வசூலும் குறைவாகவே இருக்கும் என கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
அதன்படி இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.22 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைக் காட்டிலும் ஆந்திராவில் பிச்சைக்காரன் 2 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறதாம். இதனால் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிச்சைக்காரன் 2 படத்துக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பால் விஜய் ஆண்டனி செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... விஜய் கேரக்டர் முதல் ரிலீஸ் தேதி வரை.. தளபதி 68 வீடியோவில் இவ்ளோ விஷயம் ஒளிஞ்சிருக்கா! இதை கவனிச்சீங்களா நண்பா