வரலட்சுமியை ஷங்கர் படத்தில் நடிக்க அனுமதிக்காத சரத்குமார் - அப்பாவின் கண்டிஷனால் பறிபோன 3 பிளாக்பஸ்டர் படங்கள்
நடிகர் சரத்குமாரினால் தான் ஷங்கர் படம் உள்பட 3 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்த வரலட்சுமி, அப்படத்தில் சால்சா டான்சராக தன் நடன திறமையையும் வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். போடா போடி படத்துக்கு பின்னர் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமிக்கு கிடைத்தது.
ஹீரோயினாக தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் துணிச்சலாக வில்லி வேடங்களிலும் நடித்து அசத்தி உள்ளார் வரலட்சுமி. குறிப்பாக சண்டக்கோழி படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாகவும் நடித்திருந்தார் வரலட்சுமி. பின்னர் வெல்வெட் நகரம், டேனி, சேசிங், சிங்க பார்வை என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் இந்த படங்கள் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.
இதையும் படியுங்கள்... விஜய் கேரக்டர் முதல் ரிலீஸ் தேதி வரை.. தளபதி 68 வீடியோவில் இவ்ளோ விஷயம் ஒளிஞ்சிருக்கா! இதை கவனிச்சீங்களா நண்பா
தற்போது நடிகை வரலட்சுமி நடிப்பில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்கிற திரில்லர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் வரலட்சுமி போலீஸாக நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸ் ஆரவ், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாள் பத்மநாபன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான புரமோஷனின் போது நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தவறவிட்ட படங்கள் பற்றி பேசி உள்ளார்.
அதன்படி ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க தேர்வானது வரலட்சுமி தானாம். இதற்காக ஆடிஷனெல்லாம் நடத்தியதும், ஷங்கருக்கு இவர் தான் கரெக்டா இருப்பார் என தேர்ந்தெடுத்துவிட்டாராம். ஆனால் சரத்குமார் அனுமதி அளிக்காததால் அதில் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போய் உள்ளது. இதையடுத்து தான் ஜெனிலியாவை அப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஷங்கர்.
இதேபோல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்திலும் பரத்துக்கு ஜோடியாக வரலட்சுமியை தான் நடிக்க வைக்க திட்டமிருந்தார்களாம். அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் வரலட்சுமியை நடிக்க வைக்க முயன்றாராம். ஆனால் அந்த சமயத்தில் சரத்குமார் அனுமதி அளிக்காததால் இந்த 3 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் நழுவவிட்டதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.\
இதையும் படியுங்கள்... இந்த உண்மை சம்பவம் தான் தலைவர் 170 படத்தின் கதையா? கசிந்தது தகவல் எகிறும் எதிர்பார்ப்பு!