ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.. சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1970களில் தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் சரத்பாபு. எனினும் தமிழில் இவர் நடித்த நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் பிரபலமானார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, முள்ளும் மலரும் ஆகிய படங்கள் சரத்பாபுவுக்கு தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு, முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.
மேலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்த படங்கள் இன்றளவும் பலரின் ஃபேவரைட் படங்களாக உள்ளன. அதற்கு உதாரணமாக முத்து, அண்ணாமலை போன்ற பிளாக் பஸ்டர் படங்களை உதாரணமாக சொல்லலாம்.
இதையும் படிங்க : மறைந்த நடிகர் சரத்பாபுவின் திருமண வாழ்க்கை.. அவரின் 2 மனைவிகள் யார் தெரியுமா?
இந்நிலையில் நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. செப்சிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மதியம் காலமானார். அவரின் மறைவு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சரத்பாவு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி ” என்று குறிப்பிட்டுள்ளார்.
சரத்பாபு கடைசியாக பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரஜினியின் எஜமானாக நடித்தாலும்; ரியல் லைஃப்பில் தோழனாக தோல் கொடுத்தவர் சரத்பாபு - இருவரின் நட்பு பற்றி தெரியுமா
- actor sarath babu
- actor sarath babu death
- actor sarath babu death news
- actor sarath babu health condition
- actor sarath babu health condition news
- actor sarath babu latest news
- actor sarath babu news
- actor sarath babu passed away
- sarath babu
- sarath babu death
- sarath babu family
- sarath babu health
- sarath babu health condition
- sarath babu interview
- sarath babu latest news
- sarath babu movies
- sarath babu news
- senior actor sarath babu
- telugu actor sarath babu