பிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்றும் விஜே சித்ராவின் கணவரிடம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்: உங்களால் தான் பிரச்சனையே வருது என கூறும் சித்ரா..! கதறி அழுத பாண்டியன் ஸ்டோர் கதிரின் வீடியோ..!
 

டிசம்பர் 9 ஆம் தேதி ஷூட்டிங் முடிந்து, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேமந்த்துடன் தங்கிய போது, குளிக்க செல்வதாக அவரை வெளியே அனுப்பி விட்டு பட்டு புடவையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல் மற்றும், தாவங்கட்டையில் ரத்த காயம் இருந்ததால் இது உண்மையிலேயே தற்கொலை தானா? அல்லது கொலையா என்கிற சந்தேகம் தற்போது வரை பலரது மனதிலும் இருந்து வருகிறது. ஆனால் நேற்று நடந்த இவரது பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார் என்பதும், கன்னத்தில் இருந்தது அவரது நகக்கீறல் என்பதையும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: இது தான் ரியோ..? முகத்திரையை கிழித்த அனிதா..!
 

சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, அவரது கணவர் மட்டுமே உடன் இருந்ததால், போலீசார் மூன்றாவது நாளாக இன்றும் தங்களுடைய கிடுக்குபிடி விசாரணையை நடத்தி வருகிறார்கள். மேலும் இன்றைய விசாரணையில், ஹேமந்த்தின் பெற்றோரிடமும் போலீசார் தங்களுடைய விசாரணையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
 

ஹேமந்த்திற்கு குடி பழக்கம் இருப்பதை அவரது தாயாரே கூறியுள்ள நிலையில், சித்ராவின் தாயார் தரப்பில் இருந்தும் கணவர் ஹேமந்தும் கொடுத்த மன அழுத்தமே இவரது தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டாலும், இன்னும் பல உண்மைகள் சித்ரா தற்கொலை பற்றி வெளியாகும் என ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள்.