MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shruti Haasan Breakup: புகைப்படங்களை நீக்கி... சாந்தனுவுடனான பிரேக்கப்பை உறுதி செய்தாரா ஸ்ருதிஹாசன்?

Shruti Haasan Breakup: புகைப்படங்களை நீக்கி... சாந்தனுவுடனான பிரேக்கப்பை உறுதி செய்தாரா ஸ்ருதிஹாசன்?

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 3 வருடங்களாக உருகி உருகி காதலித்து வந்த... doodle கலைஞர் சாந்தனு ஹசாரிக்காவை பிரேக் அப் செய்து விட்டதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 25 2024, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தன்னுடைய தந்தையை போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 2009-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'லக்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், பின்னர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 3, விஷாலுக்கு ஜோடியாக பூஜை, தளபதி விஜய்க்கு ஜோடியாக புலி, சூர்யாவுடன் சிங்கம் 3, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம், அஜித்துடன் வேதாளம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கடந்த ஆண்டு, நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்திலும், ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

யாருக்கு யோகம்! குருபெயர்ச்சி பலன்கள் 2024.. நம்பர் 1 இந்த ராசி தான் - தமிழா தமிழாவில் இந்த வார ஸ்பெஷல்.!!
 

38

தற்போது சலார் பார்ட் 2 மற்றும் சென்னை ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் எந்த அளவுக்கு மிகவும் பிரபலமானவரோ, அதே அளவுக்கு அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபலமாகவும் உள்ளார்.
 

48

3 படத்தில் நடிக்கும் போது தனுஷுடன் இவரை இணைத்து, சில கிசு கிசு பரவியது, இதை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சித்தார்த்துடன் நடிக்கும் போது, இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர். இதை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்லியுடன் காதலில் இருந்தார். 

Madonna: படு ஹாட்டான ஸ்டன்னிங் உடையில்... பாத் டப்பின் மேல் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை மடோனா செபாஸ்டியன்!
 

58

அவர் லண்டனை சேர்ந்தவர் என்பதால், இருவரும் அடிக்கடி பார்த்து கொள்ள முடியவில்லை என்கிற ஒரு சில பர்சனல் காரணங்களால்... இருவரும் மனம் ஒத்து 2019-ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து ஸ்ருதி சில மாதங்கள் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் திரைப்படங்கள் மற்றும் ம்யூசிக் ஆல்பம் போன்றவற்றில் கவனம் செலுத்த துவங்கினார்.
 

68

கோர்சலை பிரிந்த ஒரே வருடத்தில், மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலிக்க துவங்கினார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருவது மட்டும் இன்றி, மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக அடிக்கடி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதே போல் வெளியிடங்களுக்கு வரும் போதும், இருவரும் ஒன்றாகவே வந்து செல்வத்தையும் பார்க்க முடிந்தது.

Sun TV Serial: சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பமாகும் புத்தம் புதிய 6 சீரியல்கள்!

78

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் சாந்தனுவை விட்டு பிரிந்து விட்டதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த தகவலுக்கு ஏற்றாப்போல் இருவரும் சில மாதங்களாக ஒன்றாக காணப்படவில்லை. மேலும், ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளார். இதனால் இருவரும் பிரேக் கப் செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் பரவ துவங்கியுள்ளது.

88
Shruti Haasan

Shruti Haasan

அதே போல் சந்தனுவை ஸ்ருதி ஹாசன் அன் ஃபாலோ செய்துள்ளார். இதனால் இப்படி பரவி வரும் வதந்தி உண்மையாக இருக்குமோ என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பொதுவாக தன்னை பற்றி எழும் வதந்திகளுக்கு, பதிலடி கொடுக்கும் ஸ்ருதி இந்த தகவலுக்கு என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Family Star OTT: விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved