உங்களால் தான் பிரச்சனையே வருது என கூறும் சித்ரா..! கதறி அழுத பாண்டியன் ஸ்டோர் கதிரின் வீடியோ..!
சின்னத்திரை சீரியல், மேடை நிகழ்ச்சி என பிசியாக சுழன்று கொண்டிருந்த வி.ஜே.சித்ரா இன்று இல்லை என்கிற உண்மையை ஏற்க மறுக்கிறது மனது. அவரை டிவி மூலம் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கே, இது பெரும் இழப்பாக இருக்கும் நிலையில், இவரோடு இணைந்து நடித்தவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரித்திட முடியாது.
சின்னத்திரை சீரியல், மேடை நிகழ்ச்சி என பிசியாக சுழன்று கொண்டிருந்த வி.ஜே.சித்ரா இன்று இல்லை என்கிற உண்மையை ஏற்க மறுக்கிறது மனது. அவரை டிவி மூலம் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கே, இது பெரும் இழப்பாக இருக்கும் நிலையில், இவரோடு இணைந்து நடித்தவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரித்திட முடியாது.
இந்நிலையில் சித்ராவுடன் ஜோடி நம்பர் 1 மற்றும் பாண்டியன் ஸ்டோர் ஆகிய சீரியல்களில் அவருக்கு ஜோடியாக, கதிர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும், குமரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ பார்பவர்களையே கண் கலங்க வைக்கும் விதத்தில் உள்ளது.
இந்த வீடியோ பதிவில்... "அனைவருக்கும் வணக்கம், இப்போ சித்ரா எப்படி போனாங்க என்பதை பற்றி நான் பேச வரவில்லை. அதை பற்றி பேசுவதால் அவங்க திரும்ப வந்துவிடப்போவதும் இல்லை. அதனால், அதை பற்றி எனக்கு பேச விருப்பம் இல்லை. ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவங்க யாரவது ஒரு நல்ல நண்பரிடம் தன்னை பற்றிய பர்சனல் விஷயங்களை ஷேர் செய்திருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் ஒருவேளை இதை தடுத்திருக்கலாமோ... இந்த மைண்ட் செட்டில் இருந்து அவர் வெளியே வந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். தொடர்ந்து அழுது கொண்டே பேசிய குமரன், சித்ரா ஒரே நாளில் நிறைய வேலைகள் செய்வாங்க, அப்படி இருந்தும் சித்ரா நிறைய நேரம் 'பாண்டியன் ஸ்டோரில்' தான் செலவிடுவார்.
அப்படி என்கிட்டே பேசும் போது கூட, நீங்க பாண்டியன் ஸ்டோர்க்கு நாளை தேதி கொடுத்திருக்கீங்களானு கேட்பாங்க. நான் அதிக நேரம் இதுக்கு தான் தேதி கொடுப்பேன் வெளியில் போவது கூட குறைவு தான். ஆனால் அவங்க அப்படி இல்லை, நான் டேட் கொடுத்தேன் என்று சொன்னால் உங்களாலதாங்க பிரச்சனையே வருது. நீங்க எப்போது டேட் கேட்டாலும் கொடுத்துடுறீங்கன்னு சொல்லுவாங்க. ஏனென்றால் அன்றைய தினம் அவங்க வேற எதாவது ஷோ அல்லது ஈவென்ட் பண்ணனும்னு முடிவு பண்ணி வச்சிருந்துருப்பாங்க வேற ஏதும் இல்லை என சித்ராவை நினைத்து நினைத்து அழுதுள்ளார்.
எப்போதும் பிசியாக ஓய்வே இல்லாமல் ஓடி கொண்டே இருந்தார் சித்ரா என அவரை பற்றிய நினைவுகளை குமரன் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ இதோ...