பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக இருந்தும் கூட, தற்போது மோசமான போட்டியாளர் என்கிற முத்திரையோடு ஜெயிலுக்கு சென்றுள்ளார் அனிதா. ஏற்கனவே ரோபோ மற்றும் மனிதர்கள் இடையே வைக்க பட்ட டாஸ்கின் போது வந்த பிரச்சனையே இன்னும் ஓயாத நிலையில் ரியோவிடம் ஜெயிலில் இருந்தபடி அனிதா சண்டை போடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
 

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்... அனிதா ரியோவிடம் , ‘நிஷாவும் அர்ச்சனாவும் கேம் விளையாடும்போது அர்ச்சனா அழுததால், கேமே ஒரு லெவலில் டவுன் ஆனது. அப்போது அது உங்களுக்கு போரிங் என தெரியவில்லையா என்று கூறினார். அப்போது ’அந்த ஐடியாவை கொடுத்ததே நீதான்’ என்று ரியோ அனிதாவிடம் கோவமான முகத்துடன் கூறினார்.

இதை தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கும் அனிதா, நிஷா ஒரு விஷயம் செய்தால் உங்களுக்கு பிடிக்கலை, நான் அதே விஷயம் செய்தால் சுவாரசியம் இல்லையா? என்ற அனிதா கேட்க அதற்கு ரியோ, ‘பிடிக்கலை என்பதற்கும் சுவாரஸ்யம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார்.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற பட்டு புடவையில்... வேற லெவல் அழகில் மின்னிய விஜய் டிவி தொகுப்பாளினி டிடி..! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

அதன்பின் அனிதா, ‘கேப்டன்ஷிப் டாஸ்க்கில் ட்ரை பண்ண நிஷா பெஸ்ட் ஃபெர்மார்மர், கேப்டன்ஷிப் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நான் வொர்ஸ் பெர்மாரா? என்று தன்னுடைய ஆதங்கத்தை கூற, உடனே ரியோ ’கேப்டன்சியை வைத்து நான் சொல்லவில்லை என்று கூறுகிறார். ஒரு வாரம் முழுவதும் மோசமான போட்டியாளர் என்றால் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்லணும், அப்படி இல்லை என்றால் நீங்கள் தப்பாக சொல்லி இருக்கிறீர்கள் என்று ஆக்ரோஷமாக பேசுகிறார்.

மேலும் செய்திகள்: “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் ஜெய்யுடன் நடித்த இனிய அனுபவங்கள் பகிர்ந்த வாணி போஜன் !
 

அனிதாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ரியோ தேங்க்யூ என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர,  'கரெக்ட் பாய்ண்ட் பேசும்போது போய்விடுவார் இதுதான் ரியோ’ என்று கூறி அனிதா பதிலடி தருகிறார். அப்போது ரியோவின் முகத்திரை கிழிகிறது. இதனை உணர்ந்த ரியோ உடனே மீண்டும் அனிதாவிடம் வந்து வாதாடுகிறார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ள புரோமோ இதோ...