வைரமுத்து பெயரை வெளியிட்டு மீடூ மூலம் சர்ச்சையை துவங்கிய பின்னணி பாடகி சின்மயி, ஓய்வில்லாமல் நாளுக்கு நாள் சர்ச்சனைக்கு பஞ்சம் இல்லாத வகையில் ட்விட்டுகளை பதிவிட்டு வருகிறார்.  சில ரசிகர்கள் கேவலமான கேள்விகளை இவரிடம் எழுப்பினாலும், அதற்கு சின்மயி தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சின்மயிடம், ரசிகர் ஒருவர் உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்கள் என கூற, அதற்கு மிகவும் நிதானமாக அவர் கேட்டதை அனுப்பி அதிர்ச்சியளித்துள்ளார்.

அதாவது, அவர் கேட்ட நியூட் புகைப்படத்திற்கு பதிலாக, சின்மயி 'நியூட்' என்ற மேக்கப் சாதன நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்து இவையெல்லாம் என்னுடைய ஃபேவரைட் நியூட் என்று பதிவு செய்துள்ளார். 

இவரின் இந்த வித்தியாசமான பதிலடி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த கேள்வியை எழுப்பிய ரசிகர் டிபி, மற்றும் ட்விட்டர்  பக்கத்தின் பெயர் என அனைத்தையும் மாற்றிவிட்டு எஸ்கேப் ஆனார். ஆனால் விடுவாரா சின்மயி இந்த ரசிகரின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து போட, சமூக வளையதளத்தில் இந்த ரசிகரை கிழி கிழி என பலர் கிழித்து வருகிறார்கள்.