Asianet News TamilAsianet News Tamil

Kollywood : ரீ ரிலீஸ்.. வசூலில் மாஸ் காட்டிய சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்.. சைலெண்டாக சாதித்த சாக்லேட் பாய்!

Re Released Kollywood Movies : கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஹிட்டான பல தமிழ் திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அப்படி ரிலீஸ் ஆகும் பல படங்களுக்கு முன்பு கிடைத்த அதே வரவேற்பு கிடைக்கிறது.

Top 4 kollywood movies had heavy collectionu during their re release in recent years ans
Author
First Published Apr 25, 2024, 4:01 PM IST

சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரீலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான '3' திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் கணிசமான தொகையை வென்று சாதனையும் படைத்தது. 

அதேபோல 90களில் பிறந்த பல இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமான சூர்யாவின் "வாரணம் ஆயிரம்" திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Breaking: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் பணிபுரிந்த பெண் தற்கொலை முயற்சி!

கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படம் 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அவ்வளவு பசுமையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்நிலை இந்த திரைப்படம் கடந்த மாதம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சாக்லேட் பாய் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியான "மின்னலே" திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 23 ஆண்டுகள் கழித்து வெளியானாலும் இந்த திரைப்படம் மாபெரும் வசூலை கண்டது மாதவனுக்கு இருக்கும் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்து இன்றளவும் குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

Ramya Krishnan Net Worth: 53 வயதிலும் மகாராணி போல் வாழும் ரம்யா கிருஷ்ணா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Follow Us:
Download App:
  • android
  • ios