வேலை செய்ய வைத்த கொரோனா:

ஷூட்டிங், டப்பிங், பேஷன் ஷோ என பிஸியாக இருந்த நடிகைகள் அனைவரும், கொரோனா வைரஸின் பீதியிலினாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டின் உள்ளேயே முடங்கி உள்ளனர்.

குறிப்பாக, பெரிதாக வீட்டில் வேலை செய்து பழகாத இவர்கள்... வீட்டில் வேலை செய்பவர்களுக்கு லீவு கொடுத்து விட்டு, தங்களுடைய வீட்டு வேலைகளை அவரவர் கவனித்து வருகிறார்கள். இதனால் இந்த கொரோனாவின் மூலம் அவர்களுக்கு கிடைத்த ஓய்வு வீட்டில் வேலை செய்தபடி சூப்பராக கழிகிறது.

போட்டோஸ் - வீடியோஸ்

இப்படி தங்கள் செய்யும் வீட்டு வேலைகளை, ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக, அவ்வப்போது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆல்வா கிண்டிய நடிகை:

அந்த வகையில், தமிழில் நடிகர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூஜா ஹெட்டே... கவர்ச்சிகரமான குட்டை உடை அணிந்தபடி, கிச்சன் மேலே அமர்ந்து கேரட் அல்வா கிண்டியுள்ளார்.

மேலும் இந்த அல்வாவை அவரே சாப்பிடும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா அல்வா கிண்டியபடி, ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.