MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லோகேஷ் கனகராஜை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன் திலீப் குமார்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன் திலீப் குமார்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : May 01 2024, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nelson

Nelson

பலமுனை போட்டிகள் நிலவி வரும் திரையுலகில், நிலையான இடத்தை பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக, தன்னுடைய வித்தியாசமான கதைகளத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர் ஒரு சில இயக்குனர்கள். அந்த வகையில் மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப் குமார்.
 

26
Director Nelson

Director Nelson

விஜய் டிவியில் பல வருடங்களாக பணிபுரிந்து வந்த இவர், முதல் முதலாக நடிகை நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது மட்டுமின்றி, முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை படைத்தது.  

சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை மூலம் 'மாற்றம்' சமூக நலப்பணியை துவங்கிய லாரன்ஸ்! கை கோர்த்த முன்னணி நடிகர்!
 

36

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கிய 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. பின்னர் தன்னுடைய மூன்றாவது படத்தை தளபதி விஜய்யை ஹீரோவாக வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், படு தோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படம் நிறைவடைவதற்கு முன்பே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்க தயாரானார் நெல்சன்.

46
Director Nelson

Director Nelson

பீஸ்ட் தோல்வியால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து இவர் இயக்க இருந்த படம் கைவிடப்படமா? என பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில்,  அவை அனைத்தையும் உடைத்தெறிந்து வெற்றிகரமாக 'ஜெயிலர்' படத்தை இயக்கியது மட்டும் இன்றி, இப்படம் கடந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாகவும் மாறியது. 

திருமணத்திற்கு முன்பே வரலட்சுமி பெயரில் மும்பையில் சொந்த வீடு! நிக்கோலாய் பற்றிய பல தகவல்களை பகிர்ந்த வரு!
 

56
Super Star Rajinikanth

Super Star Rajinikanth

 தன்னுடைய அடுத்த படத்தை நெல்சன் யாரை வைத்து இயக்குவார்? என்கிறார் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில்,  தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தான் துவங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீடியா மற்றும் சினிமா துறையில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் பல ஏற்றங்களையும், சரிவுகளையும், சந்தித்துள்ளேன். அதேநேரம் இந்த துறை என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது.
 

66
Nelson Dilipkumar

Nelson Dilipkumar

நான் ஃபிளமென்ட் பிச்சர் என்கிற பெயரில் என்னுடைய புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். இந்த நிறுவனத்தின் மூலம் வித்தியாசமான சிந்தனைகளோடு படம் இயக்க ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளேன். என்னுடைய முதல் தயாரிப்பு படம் குறித்த அறிவிப்பு மே 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சமீபத்தில் புதிய தாயாருக்கு நிறுவனம் ஒன்றை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shalini Ajith Gift: அஜித்தின் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த பைக்! இத்தனை லட்சமா? விலையே கேட்டாலே தலை சுத்துதே!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved