தமிழ் திரையுலகில், நடிகையாக நிலைத்து நிற்க, கவர்ச்சி தேவை இல்லை, நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதும், என நிரூபித்து காட்டியவர் நடிகை அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடி தெரு', என ஆரம்பத்திலேயே தான் நடித்த படங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

இவரை சுற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.  

இவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள 'சிந்துபாத்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை அஞ்சலி சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சக திரையுலகினர்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்தனர்.

இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை அஞ்சலி சற்று வித்தியாசமாக வானத்தில் பறந்து கொண்டாடியுள்ளார். அதாவது ஸ்கைடைவிங் செய்து மகிழ்ந்த அஞ்சலி, தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.