TN 12th Exam Results: இன்று வெளியாகிறது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.!எந்த வெப்சைட்டில் பார்க்கலாம் தெரியுமா.?

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். 

Tamil Nadu Class 12 exam results will be declared today morning KAK

தயார் நிலையில் தேர்வு முடிவுகள்

பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது. இந்த நிலையில்  தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வினை  7 லட்சத்து 72 ஆயிரத்து 360  மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.  இதனால் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 86 மையங்களில் நடைபெற்று முடிந்தது. 

Tamil Nadu Class 12 exam results will be declared today morning KAK

எந்த வெப்சைட்டில் பார்க்கலாம்.?

இந்நிலையில்   திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதளத்தில் மாணவர்களின் கால் டிக்கெட் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை பார்த்துக்கொள்ளலாம்.மேலும் மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் எப்படி பார்ப்பது:

1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான  dge.tn.gov.in அல்லது tnresults.nic.in செல்லவும் 

2: முகப்பு பக்கத்தில் ரிசல்ட் டேப்பில் கிளிக் செய்யவும்

3: பிறந்த தேதி மற்றும் பதிவு எண் அல்லது ரோல் எண் போன்ற உங்கள் சான்றுகளை உள்ளிடவும்.

4: முடிவு திரையில் கிடைக்கும்.

5: எதிர்கால குறிப்புக்காக தேர்வு முடிவை சேமிக்கவும்.

அசல் மதிப்பெண் பட்டியல்களை சேகரிக்க, மாணவர்கள் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.. ஆன்லைனில் பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios