தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். தமிழகத்திற்கு வரும் மம்தா பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளார்.

10:20 PM (IST) Oct 31
கனமழை காரணமாக நாளை (நவம்பர் 1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
10:00 PM (IST) Oct 31
டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
09:13 PM (IST) Oct 31
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
08:55 PM (IST) Oct 31
கேரளா, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நாளை 5 மணி நேரம் விமான சேவை நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
08:31 PM (IST) Oct 31
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்கிற்கு உதவியாக நம்ம ஊர் சென்னையை சேர்ந்த ஒருவர் உதவிவருகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு ? அதை பற்றி பார்க்கலாம்.
07:18 PM (IST) Oct 31
‘தமிழக ஆளுநர் தி.மு.க ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர். எஸ். எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார்’ என்று குற்றஞ்சாட்டி உள்ளார் திருமாவளவன்.
06:47 PM (IST) Oct 31
புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு வடமாநிலத்தவரை கொண்டு நிரப்பும் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
06:27 PM (IST) Oct 31
வேலூர் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் அரசு உயர் ரக மதுபான விற்பனை கடை உள்ளது. இதில் மர்ம நபர்கள் பின்பக்க சுவரில் துளையிட்டு கடைக்கு உள்ளே புகுந்து ரூ. 3000 மதிப்பிலான பீர் பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
06:09 PM (IST) Oct 31
5 வயது சிறுமி ஆசிரியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
06:05 PM (IST) Oct 31
தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனமேலும் படிக்க
05:16 PM (IST) Oct 31
குஜராத் மோர்பி பாலம் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
04:54 PM (IST) Oct 31
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
04:13 PM (IST) Oct 31
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்படவுள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க
03:48 PM (IST) Oct 31
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தப்பித்து ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
03:18 PM (IST) Oct 31
பட்ட பகலில் மக்கள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் படிக்க
03:02 PM (IST) Oct 31
நவம்பர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
02:48 PM (IST) Oct 31
கர்நாடகாவில் பகத் சிங் போல் வேடமணிந்து ஒத்திகையில் ஈடுபட்ட சிறுவன் தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
02:27 PM (IST) Oct 31
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் படிக்க
01:44 PM (IST) Oct 31
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.மேலும் படிக்க
01:19 PM (IST) Oct 31
கடந்த வெள்ளிக்கிழமை ம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த 55 வயதாகும் இலங்கை அகதி ராஜேஸ்வரி, ரோட்டில் பார்சல் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் அதனை எடுத்த போது, பார்சலில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க
12:44 PM (IST) Oct 31
ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12:33 PM (IST) Oct 31
கோவை நகரத்தில் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது அவர்களுக்கு ஆதரவளிக்க கூடாது. எல்லா மதமும் அமைதியைத் தான் சொல்லுகிறது. இன்று முதல் கோவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
12:00 PM (IST) Oct 31
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.10 உயர்ந்து ரூ.4715 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் படிக்க
11:34 AM (IST) Oct 31
பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டுஅடக்கி, தமிழகத்தில் தற்போது இருக்கும் பாதுகாப்பற்ற, பதட்டமான சூழ்நிலை மாற்றி, மீண்டும் அமைதி பூங்காவாக தழைத்திட விடை காண்பாரா முதலமைச்சர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
11:32 AM (IST) Oct 31
குஜராத் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் சகோதரி குடும்பத்தினர் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கோர விபத்திற்கு குஜராத் அரசு முழுபொறுப்பு ஏற்பதாக மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
10:54 AM (IST) Oct 31
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
10:04 AM (IST) Oct 31
சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
09:27 AM (IST) Oct 31
பூந்தமல்லி அருகே கள்ளக்காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் மனமுடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:24 AM (IST) Oct 31
பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உறுதியாக இருப்பது தி.மு.கழகமும், அதன் ஆட்சியும். அதன் மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் பொறுப்பற்றுப் பேசக் கூடாது என முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
08:49 AM (IST) Oct 31
அந்த மதங்களை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால், அவர் தனது முதல்வர் பதவியை விட்டு விலகி விட்டு, தீபாவளி வாழ்த்து சொல்லாது இருக்கட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்து கொண்டு தீபாவளி வாழ்த்து சொல்லாமல் இருப்பதை இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும் என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
07:30 AM (IST) Oct 31
கேபிள் பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
07:30 AM (IST) Oct 31
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
07:29 AM (IST) Oct 31
ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என்று கேள்வி எழுப்பி அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.