சென்னை மாநகராட்சியில் செவிலியர் பணி.. எப்படி விண்ணப்பிப்பது..? கல்வித் தகுதி, சம்பள விவரம் இதோ..
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்படவுள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
நிறுவனம்: சென்னை மாநகராட்சி
காலி பணியிடங்கள்: 58
பணியின் பெயர்: Medical Officer, Staff Nurse
பணியின் விவரம்:
Medical Officer - 19
Staff Nurse - 39
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆப்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க !! எஸ்.பி.ஐ வங்கியில் சூப்பர் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்..
அனுப்ப வேண்டிய முகவரி:
The Member secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Department,
Ripon buildings,
Chennai - 600 003
கல்வித் தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் 4 ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:எஸ்.பி.ஐ வங்கியில் 1400 பணியிடங்களுக்கு மெகா வேலைவாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..