Asianet News TamilAsianet News Tamil

காலி பணியிடங்களுக்கு வடமாநிலத்தவர்களை நிரப்ப கூடாது.. புதுச்சேரி திமுக கோரிக்கை !

புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு வடமாநிலத்தவரை கொண்டு நிரப்பும் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இளைஞர்கள் பல்வேறு தீய செயலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது முதுநிலை எழுத்தர் பணிகளுக்கு புதிதாக ஆட்களை நியமனம் செய்வதற்காக அரசு சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அடுத்தகட்டமாக அமைச்சக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு விதிகள், புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பறிக்கும் வகையிலும், சமூக நீதிக்கு எதிராகவும் உள்ளது.

அதாவது உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு நாடு முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் என்பதால், புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு, புதுச்சேரி அரசு துறைகளில் அதிக அளவில் வட மாநிலத்தவறை பணியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்  ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு புதுச்சேரி மாநில திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உதவியாளர் பதவியை 100 சதவீதம் தற்போது பணியில் உள்ள முதுநிலை எழுத்தர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். 20 சதவீதம் நேரடி ஆட்சேர்ப்பு, 20 சதவீதம் துறை ரீதியான தேர்வு என்று திருத்தப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு விதியை மீண்டும் 100 சதவீதம் பதவி உயர்வு மூலமே வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் தலைமை செயலாளர் ராஜீ வர்மாவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதையும் படிங்க..குஜராத் மோர்பி பாலம் - 19ம் நூற்றாண்டின் வாகிஜி தாகூரால் கட்டப்பட்ட அதிசய பாலத்தின் வரலாறு தெரியுமா ?

Video Top Stories