பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
 

CM Stalin distribution of pension monthly Rs.10,000 to retired journalists

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:மத்திய அரசுக்கு பயப்படும் தமிழக அரசு அதிகாரிகள்..! அதிமுகவினரை ஒன்று சேர விடாமல் தடுக்கும் பாஜக- கே.என்.நேரு

அதுமட்டுமின்றி பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதிஉதவியை 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 

பத்திரிகையாளர் நல நிதியத்திற்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டு இத்தொகையின் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி, கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 2 கோடியே 89 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க:ஒரே ஒரு போன் கால்..! அரசு நிகழ்ச்சிகள் ரத்து..! கே.என் நேரு உத்தரவிற்காக திருச்சிக்கு ஓடிய அன்பில் மகேஷ்

 கொரோனா நோய்த் தொற்றால் இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 20 பத்திரிகையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios