ஒரே ஒரு போன் கால்..! அரசு நிகழ்ச்சிகள் ரத்து..! கே.என் நேரு உத்தரவிற்காக திருச்சிக்கு ஓடிய அன்பில் மகேஷ்

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தை பொறுத்தவரைக்கும் நாங்கள் திமுக முதன்மைசெயலாளர் கே.என் நேருவை துரோணாச்சாரியாக தான் பார்ப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

Anbil Mahesh has asked the volunteers to work hard for DMK to win 40 out of 40 constituencies in the parliamentary elections

திருச்சிக்கு வரும் மு.க.ஸ்டாலின்

அரசு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர்  4 ஆம் தேதி திருச்சிக்கு வருவதையொட்டி செய்ய வேண்டிய வரவேற்ப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திருச்சி பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று திருச்சியில் மற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலையில் தான் சென்னைக்கு சென்றேன், அப்போது  எனக்கு தொலைபேசியில் நம்முடைய கழகத்தினுடைய முதன்மை செயலாளர்  கேன்.நேரு தொடர்பு கொண்டு நாளை மத்திய மாவட்ட செயல் வீரர் கூட்டம் நடைபெற இருக்கின்றது.  நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னார், அப்போது நாளைக்கு எனக்கு  சென்னையில் 10 மணிக்கு  ஒரு நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கு முடிச்சிட்டு நாளை இரவு தான் திருச்சி வருவேன் என்று சொன்னேன். 

என்ன குறை கண்டார் ஆளுநர்..! இன்னொரு அண்ணாமலையாக ஆக வேண்டாம்..! தமிழக பாஜக தாங்காது- முரசொலி கடும் விமர்சனம்

Anbil Mahesh has asked the volunteers to work hard for DMK to win 40 out of 40 constituencies in the parliamentary elections

அன்பில் மகேஷ்க்கு அன்பு கட்டளை

நீ வந்தால் நல்ல இருக்கும் என்று சொல்லிவிட்டு கேஎன் நேரு போனை கட் பன்னிவிட்டார். பின்பு  அடுத்த நிமிஷம் எங்களுடைய துறை சார்ந்திருக்கின்ற அதிகாரிகளிடம் பேசினேன். நான் ஒன்னே ஒன்று தான் சொன்னேன் தொலைபேசியில் அழைத்தது எங்கள் அண்ணன்.  முதல்ல நம்முடைய நிகழ்ச்சியை  அனைத்தையும் இரண்டு நாள் தள்ளி வைங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் தொலைபேசியில் கே. என் நேருவை தொடர்பு கொண்டு சொன்னேன் அண்ணா நான் கண்டிப்பா நாளைக்கு வந்துவிடுகிறேன் என்று.  சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எத்தனை இடங்கள் நாம் வெற்றி பெறுவோம் , அதற்க்கு எப்படி எல்லாம் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை சொன்னது அப்படியே நடந்தது . ஏன் என்றால் சொன்னவர் ஏதோ ஆறுதல்  சொல்பவர் அல்ல,  ஆற்றல்மிகு செயலாளர் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு அண்ணன் அவர்கள் அவருடைய அந்த அனுபவம் அவர் சொல்ல வைத்திருக்கின்றது என தெரிவித்தார். 

Anbil Mahesh has asked the volunteers to work hard for DMK to win 40 out of 40 constituencies in the parliamentary elections

 40 தொகுதியில் வெற்றி

திருச்சி மாவட்டம் என்ன நினைக்கிறது அதுதான் தமிழ்நாடு நினைக்கும் அப்படின்னு அமைச்சர் அண்ணன் சொன்னார். அது உண்மை. எங்களை பொறுத்த வரைக்கும் எங்களது திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தை பொறுத்தவரைக்கும் நாங்கள் அவரை பார்ப்பது ஒரு துரோணாச்சாரியாக தான் என கூறினார். அமைச்சர் நேரு அவர்கள்  ஏகலைவன் தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.  குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கட்சி நிர்வாகிகள் கட்சியை  பலப்படுத்த உழைக்க வேண்டும் என அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

மத்திய அரசுக்கு பயப்படும் தமிழக அரசு அதிகாரிகள்..! அதிமுகவினரை ஒன்று சேர விடாமல் தடுக்கும் பாஜக- கே.என்.நேரு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios