MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜயை விமர்சித்த கையோடு திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. என்ன காரணம் தெரியுமா?

விஜயை விமர்சித்த கையோடு திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. என்ன காரணம் தெரியுமா?

Ranjana Nachiyar: தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்த கையோடு ரஞ்சனா நாச்சியார் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 19 2026, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராஞ்சனா நாச்சியார்
Image Credit : our own

ராஞ்சனா நாச்சியார்

பாஜகவில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார். இவர் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

25
விஜய் பேச்சுக்கு கண்டனம்
Image Credit : Asianet News

விஜய் பேச்சுக்கு கண்டனம்

இந்நிலையில் தவெக நடத்திய மகளிர் தின விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக தவெக விஜய் மனம் திறந்து பேசினார். அதாவது தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்லை. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம். நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம் என்றார்.

Related Articles

Related image1
பிரபல இயக்குநரின் அண்ணன் மகள் ரஞ்சனா நாச்சியார்.! விஜயை விமர்சிக்க இதுதான் காரணமா?
Related image2
சிஎம் கனவு வேஸ்ட்.. அறிவில்லாத ஆதவ் அர்ஜூனா.! விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் பகிரங்க எச்சரிக்கை.!
35
விஜயை கடுமையாக விமர்சித்த ராஞ்சனா நாச்சியார்
Image Credit : Asianet News

விஜயை கடுமையாக விமர்சித்த ராஞ்சனா நாச்சியார்

இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

45
சிஎம் கனவு என்பது எட்டா கனியே
Image Credit : Asianet News

சிஎம் கனவு என்பது எட்டா கனியே

இதனையடுத்து ரஞ்சனா நாச்சியார் ஆதவ் அர்ஜுனா பேச்சு கண்டனம் தெரிவித்தும் மற்றொரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு அரசியல் தலைவர் தன்னைச் சுற்றி அறிவுடையவர்களை வைத்திருக்க வேண்டும். சட்டத்தை மதிக்கும், சமூக பொறுப்புள்ள ஆலோசனைகளை வழங்கும் நபர்களை அருகில் வைத்திருக்க வேண்டும். அரசியல் என்பது சினிமா வசனம் அல்ல. அது பொறுப்புடன் பேச வேண்டிய மேடை. தலைவர் விஜய் அவர்களுக்கு, நீங்கள் சிஎம் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். இல்லையேல் சரியான அரசியல் அறிவு உள்ளவர்களை அனுப்ப வேண்டும். கடின உழைப்பின்றி சிஎம் கனவு என்பது எட்டா கனியே'' என ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

55
ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்
Image Credit : our own

ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: திராவிட இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்வதை பெருமையாக பார்க்கிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது. பெண்களை இழிவுப் படுத்துவதை என்னால் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஞ்சனா நாச்சியார் பிரபல இயக்குனர் பாலாவின் உடன் பிறந்த அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக தலைமையிடம் ராமநாதபுரத்தில் போட்டியிட ரஞ்சனா நாச்சியார் வாய்ப்பு கேட்டுள்ளார். அது மறுக்கப்பட்டதை அடுத்து தவெக தலைவரை விஜயை விமர்சித்த நிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
திமுக
மு. க. ஸ்டாலின்
தமிழக வெற்றி கழகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
Recommended image2
Now Playing
Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
Recommended image3
காலையிலேயே வந்த ஹேப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
Related Stories
Recommended image1
பிரபல இயக்குநரின் அண்ணன் மகள் ரஞ்சனா நாச்சியார்.! விஜயை விமர்சிக்க இதுதான் காரணமா?
Recommended image2
சிஎம் கனவு வேஸ்ட்.. அறிவில்லாத ஆதவ் அர்ஜூனா.! விஜய்க்கு ரஞ்சனா நாச்சியார் பகிரங்க எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved