5 வயது சிறுமி ஆசிரியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கத்வா மாவட்டத்தில் உள்ள மொகத் பகுதியில் செயல்படும் மதரசா எனப்படும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஒரு 5 வயது சிறுமி படித்து வந்திருந்தார். அப்போது அதே பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமியை, ஆசிரியர் மவுல்வி அப்துல் சமத் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சிறுமி சோர்வுடனும், உடல்நிலை சரியில்லாமலும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். உடனே அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதையும் படிங்க..நவம்பர் 6ம் தேதி.! ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - தமிழக காவல்துறை உத்தரவு

இதை அடுத்து மதரசா பள்ளி ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். கடந்த இரண்டு மாத காலமாக தினமும் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் குழந்தை மிகவும் களைப்புடனும், வலியுடனும் சென்று கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!
இதையும் படிங்க..குஜராத் மோர்பி பாலம் - 19ம் நூற்றாண்டின் வாகிஜி தாகூரால் கட்டப்பட்ட அதிசய பாலத்தின் வரலாறு தெரியுமா ?
