Asianet News TamilAsianet News Tamil

சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் மரணம்.. மீண்டும் சுதந்திரமாக விசாரிக்க உத்தரவு

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் இறந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Ramkumar death case - Order for independent probe to TN Government by State Human Rights Commission
Author
First Published Oct 31, 2022, 3:16 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி, அதிகாலை 6:40 மணியளவில் வேலைக்குச் செல்ல ரயில் நிலைய நடைமேடையில் காத்திருந்த பொறியாளர் சுவாதி, இளைஞர் ஒருவரால் அரிவாளால் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டார்.

பட்ட பகலில் மக்கள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர். 

மேலும் படிக்க:12 மணி நேரத்தில் 148 தடயங்கள் சேகரிப்பு..! குற்றவாளிகள் கைது..! போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த மு.க.ஸ்டாலின்

கைது செய்யும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறையில் மின்சார வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் மகன் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்துவந்த நிலையில்,  ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:நவம்பர் 6ம் தேதி.! ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - தமிழக காவல்துறை உத்தரவு

அதில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் ராம்குமாரின் உடலில் 12 காயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் ராம்குமார் சுவாதி மீது ஒருதலைக் காதல் கொண்டு அதனை அவரிடம் வெளிபடுத்தியுள்ளார். ஆனால் அதனை ஏற்காததால் சுவாதியை கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கொலை வழக்கு விசாரணையில் இருந்தபோதே கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலைஉ செய்துக்கொண்டதால் கொலை வழக்கு முழுமையாக விசாரிக்கப்படாமல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios