ஒத்த ஓட்டு ஓட்டைவாய் அண்ணாமலை.. உளறிக் கொட்டாதீங்க.. சும்மா எகிறி அடிக்கும் செந்தில் பாலாஜி..!
ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என்று கேள்வி எழுப்பி அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என்று கேள்வி எழுப்பி அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் தொடர்பாக தவறான தகவலை பரப்பிய செய்தியை சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அண்ணாமலை செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்று கடுமையான வார்த்தையால் விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க;- 100 கடைகள் ஓகே! ராஜினாமா செய்யுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை விட்ட சவால் !
இந்நிலையில், கோவை சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்த துறைக்கும் சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!
இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.