கோவையில் மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த திட்டம்..? ஆணி, பாஸ்ராஸ் குண்டுகளை காண்பித்து அண்ணாமலை ஆவேசம்
கோவை நகரத்தில் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது அவர்களுக்கு ஆதரவளிக்க கூடாது. எல்லா மதமும் அமைதியைத் தான் சொல்லுகிறது. இன்று முதல் கோவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையில் அண்ணாமலை
கோவை கார் குண்டு வெடி விபத்து நடைபெற்ற கோவை உக்கடம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்ட நிர்வாகிகளோடு சென்று பார்வையிட்டார். இதனையடுத்து அங்குள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கோவை உக்கடம் பகுதியில் 23 ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு கோவில் வாசலில் கார் குண்டு வெடி விபத்து சம்பவம் நடந்துள்ளது. அனைத்து தரப்பும் இதை பற்றி பேசி வருகின்றனர். இந்த நிகழ்வை தாண்டி செல்ல வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்னுக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் மீண்டும் பின்னோக்கி சென்றிருக்கும்.
போலீசாருக்கு பாராட்டு
தற்கொலைப்படை தாக்குதல் என தெரிந்த பிறகும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உயிரை பணயம் வைத்து பணி செய்துள்ளது. கோவை போலீசாருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். மதத்தால் பிளவு படுத்த முயன்றாலும் மக்கள் ஒன்றாக உள்ளனர். மதத்தால் பிரித்து மக்களின் ஒற்றுமை உணர்வை சிதைக்க முயற்சி செய்துள்ளனர். பாஜக அவர்கள் மீது மத சாயத்தை பூசவில்லை. குற்றவாளிகள் என்று தான் கூறி வருகிறோம். கோவை நகரத்தில் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது அவர்களுக்கு ஆதரவளிக்க கூடாது. எல்லா மதமும் அமைதியைத் தான் சொல்லுகிறது. இன்று முதல் கோவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
கோட்டை விட்ட காவல்துறை
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக மாநில அரசுக்கு கேள்வி வைத்துள்ளோம். அது மாநில அரசுக்கு தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை. அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சி உள்ளதால் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கேள்விகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த கார் குண்டு வெடி விபத்து நிகழ்வு சாதாரணமாக செய்யவில்லை. மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படுத்த வேண்டும் என செய்துள்ளனர். காவல்துறையின் உப உளவு நிறுவனம் 96 பேரை கன்காணிக்க ஜூன் 19 ல் அறிக்கை கொடுத்துள்ளது. அதில் 89 வது நபராக முபீன் உள்ளார். அவரை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியும் செய்யவில்லை என கூறினார்.
இஸ்லாமிய மத குருமார்களை சந்திப்பேன்
இதுவரை காவல்துறை சிலிண்டர் விபத்து என சொல்வது ஏன் என கேள்வி எழுப்பினார். குண்டு வெடி விபத்து என்றால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். மக்களை எச்சரிக்கை விடுப்பது காவல்துறையின் தலையாய பணி மக்களை சுதாரிப்பதற்காகவே சொல்லி வருகிறோம் ஐ எஸ் ஐ எஸ் தவறானவர்கள் என இஸ்லாம் மத குருமார்களே சொல்கிறார்கள். இஸ்லாமிய மதகுருமார்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர்கள் நேரம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழக காவல்துறையை பாராட்டியாக வேண்டும் சில இடங்களில் சிஸ்டமிக் ஃபெயிலியர் ஆகியுள்ளது. ஜூன் 19 ல் குறிப்பாக ஒரு மனிதனை காண்பித்து சொல்லும்போது அவனை கண்காணிக்க வேண்டியபணி காவலரிலிருந்து அதிகாரிகள் வரை உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்