கோவை கார் வெடி விபத்து.! எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க கூடாது..! ஆர்.பி.உதயகுமார்

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டுஅடக்கி, தமிழகத்தில் தற்போது இருக்கும் பாதுகாப்பற்ற, பதட்டமான சூழ்நிலை மாற்றி, மீண்டும் அமைதி பூங்காவாக தழைத்திட விடை காண்பாரா முதலமைச்சர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

RB Udayakumar has accused the Chief Minister of being silent by not answering the questions of the opposition parties

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது வேர்விட்டிருக்கிற தீவிரவாதம், பயங்கரவாதம் தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.இன்றைய சூழ்நிலையில் கார் குண்டுவெடிப்பா, கேஸ் வெடிப்பா என்ற விவாதம் தாண்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் தான் அதிலிருந்து தமிழகம் தப்பித்து பிழைத்துள்ளது என்பதுதான் உண்மை.

தமிழ் சமுதாய மட்டுமல்ல, மனித சமுதாயத்தை காப்பாற்றவும், இந்த பயங்கரவாதத்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும், அமைதி குலைந்து போய் நாம் இன்றைக்கு பொருளாதாரத்தில் பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிற போது இந்த பயங்கரவாதத்தால் பொருளாதார மிகப் பெரிய சவாலாக வந்து விடும். உதாரணமாக ஏற்கனவே நம்முடைய  ஏற்கெனவே பெரும் முதலீடுகள் வேதாந்தா ,பாக்ஸ்கான் போன்ற முதலீடுகள் 2 லட்சம் கோடி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றிருக்கிறது.  

RB Udayakumar has accused the Chief Minister of being silent by not answering the questions of the opposition parties

பால்வாடித்தனமான அரசியல் செய்கிறார்... அண்ணாமலையை கடுமையாக சாடிய திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி!!

இப்போது விவாதம் என்ன இது பயங்கரவாதமா, இல்லையா, வெடிகுண்டா? என்பதையெல்லாம் தாண்டி இன்றைக்கு உண்மை பட்டவர்த்தமாக வெளிச்சம் போட்டு காட்டுகிற வகையில் தமிழகம் பயங்கரவாத சதி திட்டத்தில் இருந்து தப்பி பிழைத்திருக்கிறது. இதுதான் உண்மை இது நாம் செய்த புண்ணியம். இனி ஒரு சம்பவம் நடந்து விடாமல் இருப்பதற்கு எந்த விதமான சமரசம் இல்லாமல், இரும்புக்கரம் உண்டு இதிலே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ,இதனை அவர்கள் கேள்வி கேட்டார்கள், இவர்கள் கேள்வி கேட்டார்கள், இதை கேள்வி கேட்கலாமா கேட்கக்கூடாதா இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா உட்படவில்லையா இதை ஏன் கவர்னர் பேசுகிறார், இதை ஏன் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பேசுகிறார் இதை என் அண்ணாமலை பேசுகிறார், இதை ஏன் அவர் பேசுகிறார் என்று சாக்கு போக்கு சொல்லி நீங்கள் தப்பித்து சொல்லக்கூடாது 

RB Udayakumar has accused the Chief Minister of being silent by not answering the questions of the opposition parties

உங்கள் கூட்டணியிலுள்ள கட்சியில் இருக்கிறவர்கள் வேண்டுமானால் இந்த நடவடிக்கையை அவர்கள் உங்களுடைய தயவுக்காக அவர்களுடைய பார்வை வேண்டுமானால் இதில் வேறுபடுலாம், பொதுவான பார்வை, நியாயமான பார்வை பாதுகாப்பு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான். பயங்கரவாதத்தால் கல்வி சீரழியும், பயங்கரவாதத்தால் பொருளாதார சீரழியும், பயங்கரவாதத்தால் எதிர்காலம் சீரழியும் பயங்கரவாதத்தால் பசி பஞ்சம் பட்டினி என்ற ஒரு நிலை இந்த நாட்டிலே உருவாகும், இந்த பயங்கரமாகவே என்கிற ஒற்றை சொல்லில் ஒட்டுமொத்த மனித சமுதாயம், எதிர்காலம் கேள்விக்குறியாக கூடிய ஒரு அதிபயங்கர அணுகுண்டை ஆயுதத்தை விட அணு ஆயுதத்தை விட பயங்கரமானது தான் பயங்கரவாதம்  


அதனால்தான் இன்றைக்கு மக்கள் இன்றைக்கு வேதனையோடு, கண்ணீர் வடித்துக் கொண்டு இந்த அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதை குற்றச்சாட்டாக அரசு பார்க்க கூடாது இது தங்கள் மீது சுமத்துகிற குற்றச்சாட்டாக அரசு பார்க்குமானால் உண்மை நிலையை அறிவதற்கு அரசு தவறிவிடுகிற ஒரு நிலைமை உண்டாகும், பிரதானஎதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் சட்ட ஒழுங்கை காப்பாற்ற கோட்டை விடுகிறார்கள் என்பதை ஆதாரத்தோடு சட்டமன்றத்தில் எடுத்துச்  சொல்லி,கவனமாக அரசு கையாள வேண்டும் என்று கூறினாரே? நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா? அதில்   நீங்கள் கவனம் செலுத்தி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா இந்த நிலைமை ஏற்பட்டு இருக்குமா? 

ஒத்த ஓட்டு ஓட்டைவாய் அண்ணாமலை.. உளறிக் கொட்டாதீங்க.. சும்மா எகிறி அடிக்கும் செந்தில் பாலாஜி..!

RB Udayakumar has accused the Chief Minister of being silent by not answering the questions of the opposition parties

எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் சட்ட ஒழுங்கு குறித்து எடுத்துச் சொன்னால் நீங்கள் ஏளனமாக பேசுகிறீர்கள், நக்கல் செய்கிறீர்கள், நையாண்டி செய்கிறீர்கள், அதை அக்கறையோடு கவனத்தோடு பொறுப்புள்ள அரசாக நீங்கள் அதனை கவனம் செலுத்தி இருந்தால்,இந்த நிலைமை இந்த தாய் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தான் உண்மையான நிலைமை. எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடியார் கேள்விக்கு  பதில் சொல்வதை விட  உங்களுக்கு முக்கியமான இந்த நாட்டிலே என்ன வேலை இருக்கிறது என்று உதயகுமார் கேட்கவில்லை,  

நாட்டு மக்கள் கேட்கிறார். ஏன் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்வது தேச குற்றமா? எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொன்னது கிடையாதா? எடப்பாடியார் ஆதாரத்துடன் சொல்கிறார் எதையும் மிகப்படுத்தி சொல்லவில்லை.எடப்பாடியார் சட்ட சபையிலும் சரி, பொதுவெளியில் சரி ,மக்கள் மன்றத்திலும் சரி  ஆரவாரத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ, தன் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவோ தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக நிச்சயமாக  எந்த கருத்தில் சொல்ல மாட்டார்.

அவர் ஒரு கருத்தை சொல்லுகிறார் என்று சொன்னால் ஆயிரம் முறை அலசி ஆராய்ந்து, திட்டமிட்டு சிந்தித்து, மக்களுடைய நலனுக்காக, பாதுகாப்புக்காக,எதிர்காலத்திற்காக, கல்விக்காக,பொருளாதாரத்திற்காக,  வளர்ச்சிக்காக ,ஒட்டுமொத்த தேசத்திற்காக, நாட்டிற்காக, தமிழ்மொழிக்காக, தமிழ் இனத்திற்காகத்தான் கருத்துக்களை, கேள்விகளை, கோரிக்கைகளை, வேண்டுகோள்களை, கண்டனங்களை முன்வைப்பாரே தவிர,உங்களைப் போன்ற  விளம்பரத்திற்காக, ஆதாயத்திற்காக கூற மாட்டார்.

RB Udayakumar has accused the Chief Minister of being silent by not answering the questions of the opposition parties

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எந்த ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல், வெற்று விளம்பரத்திற்காக குற்றச்சாட்டை கூற வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் இலக்கணமாக வைத்து, நீங்கள் நடத்திய  40 ஆயிரம் போராட்டங்களை எடப்பாடியார் முறியடித்துக் காட்டி, அத்தனைக்கும் ஒருவரி விடாமல் பதில் சொன்னார், ஆனால் நீங்கள் எதற்கும் பதில் சொல்வதில்லை. கோவை குண்டு வெடிப்பிற்கு எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை நீங்கள் பதில் கூறவில்லை,  பதில் சொல்லாமல் வாய் மூடி மௌனியாக இருப்பது, பயங்கரவாதத்தை வேடிக்கை பார்க்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறதே, பயங்கரவாதத்தால் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்திலேயே ஏற்பட்டிருக்கிறது இதற்கு யார் காரணம், முதலமைச்சர் பதில் சொல்லாத ஒன்றே தான் காரணம், நீங்கள் பதில் சொன்னால் அதிகாரிகள் விழிப்போடு இருப்பார்கள்.. 

 நடைபெற்றது பயங்கரவாதம் தான்  அதில் ஈடுபட்ட அந்த நபருக்கு  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சம்பவங்களோடும், பயங்கரவாத அமைப்புகளோடு அவருக்கு தொடர்பு இருப்பது என்பது விசாரணை தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது. மத்திய அரசு கொடுத்த பட்டியலிலே பயங்கரவாத தொடர்பில் உள்ள பட்டியல்களில் இதில் ஈடுபட்ட அவர்களுடைய பெயரும் அதுல இருந்தது என்பது வெளிப்படையாக இன்றைக்கு எல்லோரும் அறிந்து செய்தி இதை மூடி மறைப்பதில் என்ன இருக்கிறது.  முதலமைச்சர் மௌனத்தை கலைத்து  கேள்விக்குறியாக விடை சொன்னால் தான் இந்த நாட்டிலே நிர்வாகம் சரியாக இருக்கும், தற்போது வேண்டுமானால் நீங்கள் மருத்துவ ஆலோசனையில் மருத்துவ கண்காணிப்பிலே இருக்கலாம் நான் இந்த நேரத்திலே சொல்லவில்லை, 

நான் சொல்வது பொதுவான நேரங்களிலே இந்த நிர்வாகத்தை செயல்படுத்துகிற நிர்வாகத்தை தலைமை தாங்கும் முதலமைச்சர். எடப்பாடியார் கேள்விக்கு உரிய பதில் தந்தால்   அந்த ஒவ்வொரு பதிலும் இந்த நாட்டினுடைய நன்மை இருக்கிறது என்பதை முதலமைச்சர் மறந்துவிடக்கூடாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆளுநரை பதவி விலக சொல்லும் கட்சிகள்.! ஆளும் திமுகவின் அடிமைகள்.! ஜால்ரா அடிப்பதை தவிர வேறு என்ன தெரியும்.? பாஜக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios