Asianet News TamilAsianet News Tamil

பால்வாடித்தனமான அரசியல் செய்கிறார்... அண்ணாமலையை கடுமையாக சாடிய திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி!!

வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி விமர்சித்துள்ளார். 

annamalai doing petty politics in Coimbatore car blast case says dmks rajiv gandhi
Author
First Published Oct 30, 2022, 8:45 PM IST

வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினந்தோறும் தனக்கு அறிக்கையை வேண்டும் என்ற முறையில் வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார். தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இக்கட்டான வழக்குகளில் அண்ணாமலை அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கி இருக்கிறார். கார் வெடிப்பில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இன்று மதியம் வந்த அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவதாகவும், காவல்துறையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. கோவையில் 23ஆம் தேதி காலை நான்கு மணிக்கு விபத்து நடந்ததாக சொல்லப்படும் போது முதலில் போய் அந்த எரிந்த காரை கைப்பற்றிய காவல்துறை நண்பர் அவர் எந்த ஜாதி, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது.

இதையும் படிங்க: கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்

உள்ளே வெடிகுண்டு இருக்கிறதா என்பது கூட தெரியாது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து தன்னுடைய காவல்துறை வேலையை செய்த காவல் அதிகாரிகளை இந்த சாதி, இந்த மதம், அதனால் சரியில்லை என்ற உளறல்களை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கோவை பகுதி மத அடிப்படைவாதிகளுடைய ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான பின்பு ஒரு அரசியல் கட்சியாக ஒரு சம்பவம் நடந்தால் அந்த மக்களிடம் போய் விளக்க வேண்டியதும், மக்கள் சமூக நல்லிணக்கம் பெற இணக்கமான சூழலை கொண்டு வருவதுதான் அரசியல் கட்சியின் வேலை. அதற்கு மாறாக கோமாளித்தனமாக பந்த் நடத்துகிறோம், யாரும் தொழில் செய்யாதீர்கள், கடையை திறக்காதீர்கள் என்றால், இன்னைக்கு இருக்கக்கூடிய சூழலில் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமான கோவையில் இனிமேல் யாரும் தொழில் செய்யாதீர்கள் என்பதைபோல் கோவையை எப்போதும் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பதற்றமாக வைத்திருக்கக்கூடிய அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களுடைய செயல் மிகவும் வெட்கக்கேடான செயல்.

இதையும் படிங்க: முதல்வர் காட்டுபவர் தான் வருங்கால பிரதமர்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி!!

ஏழு நாள் ஏழு நாட்கள் ஆகிவிட்டது முதல்வர் ஏன் பேசவில்லை என அண்ணாமலை கேட்கிறார். 27 ஆம் தேதி மாலையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஒரு பேச்சுக்கு கூறினால் கூட மோடி ஏன் இந்த வழக்கு இன்னும் குறித்து பேசவில்லை. இப்படி நான் கேள்வி கேட்டால் இது எப்படி முட்டாள்தனமான வாதமாக இருக்கும். மாநில அரசு பேசவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். பரவாயில்லை மாநில அரசு பேசாமல் இருந்ததாகவே போகட்டும். சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் இரு காவல்துறை அதிகாரிகளை கூப்பிட்டு நேரடியாக போகச் சொல்கிறார். பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படுகிறது.  மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையும் இந்த வழக்கை நடத்துகிறது. ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகின்றது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை ஏன் பேசவில்லை என்ற கேள்வி கேட்டால் எப்படி பால்வாடித்தனமாக இருக்குமோ அது போன்ற பால்வாடித்தனமான அரசியலைத் தான் அண்ணாமலை செய்து கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios