Asianet Tamil News Live: மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் திடீர் மாற்றம்..!
May 23, 2023, 9:13 PM IST
![Tamil News live updates today on may 23 2023](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Tamil News live updates today on may 23 2023](https://static-gi.asianetnews.com/images/01gzdvehphzfw7wpe9nk93ezjv/whatsapp-image-2023-05-02-at-2-36-17-pm_900x450xt.jpg)
தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்ட காரணத்தால் அந்த பொறுப்பிற்கு அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
9:13 PM
மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை குட்டி உயிரிழப்பு.. என்ன காரணம்?
மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் நமீபிய சிறுத்தைக்கு பிறந்த குட்டி இறந்தது.
7:57 PM
சித்தராமையா தான் 5 ஆண்டுகளுக்கும் முதல்வர் என்று கூறிய அமைச்சர்.. டி.கே.சிவகுமார் சொன்ன பதில் என்ன தெரியுமா?
கர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு இல்லை என்று கூறிய காங்கிரஸ் தலைவர் எம்பி பாட்டீலின் கருத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் இன்று பதிலளித்துள்ளார்
6:33 PM
வங்கிகளில் ரு.2000 நோட்டு டெபாசிட்.. இந்த வரம்பை தாண்டினால் பான் கட்டாயம்.. விவரம் உள்ளே..
ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக, வங்கிகள் தங்கள் சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
5:58 PM
யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்திய இஷிதா கிஷோர்? யார் இவர்?
2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
5:56 PM
3-ம் சுற்று பணிநீக்கத்தை தொடங்கிய பிரபல நிறுவனம்.. 2500 பேர் வேலை இழக்கும் அபாயம்
டிஸ்னி நிறுவனம் தனது மூன்றாவது சுற்று பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது.
3:52 PM
திருப்பதிக்கு போக போறீங்களா? சிறப்பு தரிசனம் டிக்கெட் குறித்து வெளியான முக்கிய தகவல்..
திருப்பதி கோயிலில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (மே 24) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது
3:25 PM
மிகப்பெரிய இளைஞர் திறமையின் தொழிற்சாலையாக இந்தியா உள்ளது.. சிட்னியில் பிரதமர் மோடி பெருமிதம்
மிகப்பெரிய இளைஞர் திறமையின் தொழிற்சாலையாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2:54 PM
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2:50 PM
செந்தாழம் பூவில்... வந்தாடிய தென்றல்... காற்றில் கரைந்தது! நடிகர் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னையில் நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் சுஹாசினி, ராதிகா சரத்குமார் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சென்னையில் தி-நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடல் 2 மணியளவில் இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சரத்பாபு உடல் தகனம்
2:37 PM
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதல் 4 இடங்களை பிடித்து அசத்திய பெண்கள் !!
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர்.
2:34 PM
மெகா வேலைவாய்ப்பு.. இந்தியா போஸ்ட்-ல் 12,828 காலி பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..
இந்தியா போஸ்ட்-ல் காலியாக உள்ள 12,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1:56 PM
மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு இறுதிச்சடங்கு - கலங்க வைக்கும் வீடியோ
இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு கிண்டியில் உள்ள மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
1:48 PM
44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Oppo F23 5G எப்படி இருக்கு?
ஓப்போ நிறுவனம் தனது F சீரிஸில் பக்காவான பவர்புல் ஸ்மார்ட்போன் ஆன Oppo F23 5Gயை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
1:47 PM
நடிகர் சரத்பாபுவின் இறுதி ஊர்வலம் நேரலை
நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பிற்பகல் 2 மணியளவில் கிண்டியில் உள்ள தொழிற்பேட்டை அருகே உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான நேரலை
1:44 PM
உயர்ந்த உள்ளம் கொண்டவர்! மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கருமுத்து கண்ணன் மறைவு! ஸ்டாலின் இரங்கல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1:44 PM
மக்களை வாட்டி வாதைக்கும் கோடை வெயில்.. அரசு பள்ளிகளை ஜுன் 1ம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்? ராமதாஸ்.!
கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என ராமதாஸ் கூறியுள்ளார்.
1:29 PM
நடிகர் சரத்பாபுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
நடிகர் சரத்பாபுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
1:09 PM
சரத்பாபு உடலுக்கு சூர்யா - கார்த்தி அஞ்சலி
சென்னை தி நகரில் உள்ள நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் சூர்யாவும், அவரது சகோதரர் கார்த்தியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
12:58 PM
திமுக ஆட்சி வந்தும் பயன் இல்லை.. பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது? அதிரடி காட்டிய ராமதாஸ்
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
12:41 PM
தப்பா மெசேஜ் அனுப்பிட்டீங்களா.. 15 நிமிசத்துல எடிட் பண்ணிக்கலாம் தெரியுமா? வாட்ஸ்அப் அப்டேட்
வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
12:10 PM
சரத்பாபு உடல் எப்போது நல்லடக்கம் செய்யப்படும்? - வெளியான லேட்டஸ்ட் தகவல்
சரத்பாபுவின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிண்டியில் உள்ள தொழிற்பேட்டை அருகே உள்ள மின் மயானத்தில் தான் நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாம். அவருக்கு வாரிசு இல்லாததால் குடும்பத்தினர் தான் இறுதிச்சடங்குகளை செய்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் படிக்க
11:33 AM
நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் - எப்போ தெரியுமா?
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனது நீண்ட நாள் காதலியான லாரன் சான்செஸுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
10:55 AM
மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
மறைந்த சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி; அண்ணாமலை, முத்து மற்றும் வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் சரத்பாபு இணைந்து நடித்துள்ளார். மேலும் படிக்க
10:36 AM
Gold Rate Today : அடி தூள்.!! சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக அதிகரித்த வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை பார்க்கலாம்.
10:16 AM
சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வந்த சரத்பாபு தனது கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்துவிட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
9:36 AM
நடிகர் சரத்பாபு உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது
நடிகர் சரத்பாபு உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை, தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
9:17 AM
டெல்லி அதிகார மோதல்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்குமா காங்கிரஸ்? அடுத்தடுத்து திருப்பம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் தொடர்பாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கெஜ்ரிவாலின் போராட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
8:56 AM
இந்தியாவிற்குள் நுழைந்து புதிய முகாம்களை அமைக்கும் சீனா.. இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?
உத்தரகாண்டிற்கு எதிரே உள்ள மத்தியப் பகுதியில் விமான இணைப்பில் சீனர்கள் கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
8:50 AM
இனிமேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இறப்பும், கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரக்கூடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாள் விளங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
8:50 AM
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் எதுக்கு கொண்டு வரணும் சொல்றேன்னு இப்ப நாச்சி புரியுதா.. அண்ணாமலை..!
அரசியல் காரணங்களுக்காக நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகளைத் தடுப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
8:38 AM
3 நாட்களில் பிறந்தநாள் கொண்டாட இருந்த RRR பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜவுலி இயக்கிய RRR படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் இத்தாலியில் திடீரென காலமானார். அவருக்கு வயது 58. மேலும் படிக்க
8:12 AM
2023ன் இறுதிக்குள் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்! அசாம் முதல்வர் அறிவித்த பின்னணி என்ன?
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் என்று அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
7:14 AM
ஆவின் பணியாளர்கள் இந்த 12 உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.. களத்தில் இறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்.!
ஆவின் பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று 12 உத்தரவுகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிறப்பித்துள்ளார்.