3-ம் சுற்று பணிநீக்கத்தை தொடங்கிய பிரபல நிறுவனம்.. 2500 பேர் வேலை இழக்கும் அபாயம்

டிஸ்னி நிறுவனம் தனது மூன்றாவது சுற்று பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது.

The famous company started the 3rd round of layoffs.. 2500 people are at risk of losing their jobs

உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கடந்த ஆண்டு முதலே ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அமேசான், மெட்டா, ட்விட்டர், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மைக்ரோசாப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது மூன்றாவது சுற்று பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பணிநீக்கம் காரணமாக 2,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : மோடியை தனது 'பாஸ்' என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் குறிப்பிடக் காரணம் என்ன?

செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டிஸ்னி நிறுவனம் இந்த வாரம் அதன் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டஜன் கணக்கான தலைப்புகளை அகற்றத் தொடங்கியது. எனினும் இரண்டாம் சுற்று பணி நீக்கத்தின் போது, தொலைக்காட்சிப் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இம்முறை தொலைக்காட்சி பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் எழுத்தாளர்களின் வேலைநிறுத்தத்தின் விளைவுகளைச் சமாளிக்க ஊடக நிறுவனங்கள் போராடி வருவதால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வளர்ச்சி மற்றும் தயாரிப்பை நிறுத்தியதால் புதிய சுற்று பணிநீக்கத்தை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் மூன்று சுற்று பணிநீக்கங்களை அறிவித்தபோது முதல் சுற்று பணிநீக்கங்கள் மார்ச் மாதத்தில் தொடங்கியது, ஏனெனில் நிறுவனம் தனது பணியாளர்களை சுமார் 7,000 தொழிலாளர்களால் குறைக்கும் நோக்கத்தில் உள்ளது. ஏப்ரல், மாதத்தில் டிஸ்னி தனது இரண்டாவது சுற்று பணிநீக்கங்களைத் தொடங்கியது. இதனால் 4,000 ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது.

பணிநீக்கங்கள் மற்றும் பிற செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக $5.5 பில்லியன் பணத்தை சேமிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக டிஸ்னி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மிகப்பெரிய இளைஞர் திறமையின் தொழிற்சாலையாக இந்தியா உள்ளது.. சிட்னியில் பிரதமர் மோடி பெருமிதம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios