சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வந்த சரத்பாபு தனது கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்துவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து உடனடியாக பெங்களூருக்கு மாற்றப்பட்டார். அங்கும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்ட சரத்பாபுவுக்கு அங்கு கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர் செப்சிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததால், அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என அனைத்தும் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று (மே 22) மதியம் 1.30 மணியளவில் சரத்பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையும் படியுங்கள்... நெருங்கிய நண்பனை இழந்திருக்கிறேன்... ஈடுசெய்ய முடியாத இழப்பு - சரத்பாபு மறைவால் கலங்கிப்போன ரஜினிகாந்த்
250 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபுவுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. சினிமா வாழ்க்கை சக்சஸ்புல்லாக அமைந்தது போல் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையவில்லை. இருமுறை திருமணம் செய்தும் விவாகரத்தில் முடிந்தது சரத்பாபுவின் இல்லற வாழ்க்கை. 2 முறை திருமணம் ஆகியும் அவருக்கு வாரிசு இல்லை. நடிகர் சரத்பாபு கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்கிற படத்தில் நடித்திருந்தார்.
பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்த சரத்பாபுவுக்கு அவரது கடைசி ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஆந்திராவில் உள்ள ஹார்செலி ஹில்ஸ் பகுதியில் வீடுகட்டி அங்கு தன் கடைசி காலத்தை செலவிட வேண்டும் என விரும்பினாராம். இதற்காக அங்கு இடம்வாங்கி வீடும் கட்டி வந்திருக்கிறார் சரத்பாபு. ஆனால், வீடு கட்டும் பணி முடிவடைவதற்கு முன்பே சரத்பாபு இறந்துவிட்டார். இதனால் ஹார்செலி ஹில்ஸில் குடியேற வேண்டும் என்கிற அவரது கடைசி ஆசை நிறைவேறாமலே போய் உள்ளது.
இதையும் படியுங்கள்... தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்த நடிகர் சரத்பாபு.. யார் இந்த ரமா பிரபா?