திருப்பதிக்கு போக போறீங்களா? சிறப்பு தரிசனம் டிக்கெட் குறித்து வெளியான முக்கிய தகவல்..

திருப்பதி கோயிலில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (மே 24) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது

Are you going to Tirupati? Important information released about special darshanam ticket..

ஆந்திராவில் உலக பிரசித்த பெற்ற திருப்பதி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் மூலம் தினசரி 20,000 டிக்கெட் வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்து மதத்தில் எந்த தெய்வத்தின் வாகனம் பூனை அல்ல....ஏன் தெரியுமா?

இந்நிலையில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (மே 24) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https:www.tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இதையும் படிங்க : மறந்தும் கூட இந்த ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணியாதீர்கள்...!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios