Asianet News TamilAsianet News Tamil

செந்தாழம் பூவில்... வந்தாடிய தென்றல்... காற்றில் கரைந்தது! நடிகர் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட்டது

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் தி-நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Actor Sarath Babu body cremated at guindy Industrial ground
Author
First Published May 23, 2023, 2:43 PM IST

தமிழ் சினிமாவுக்கு பல்வேறு திறமைமிக்க கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர். அப்படி அவர் அறிமுகப்படுத்திய மற்றுமொரு மாபெரும் கலைஞன் தான் சரத்பாபு. இவரது இயற்பெயர் சத்யம் பாபு, இவருக்கு சரத்பாபு என பெயரிட்டது கே.பாலச்சந்தர் தான். அவர் வைத்த அந்தப் பெயர் தான் நாளடைவில் அவரது அடையாளமாகவே மாறியது. பாலச்சந்தர் இயக்கிய பட்டின பிரவேசம் படத்தின் மூலம் கடந்த 1977-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சரத்பாபு.

நடிகர் சரத்பாபுவிற்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படம் தான். இப்படத்தில் அவர் ஜீப் ஓட்டியபடி பாடி வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் என்கிற பாடல் இன்றளவும் ரசிகர்களின் செவிகளில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் மூலம் நடிகர் சரத்பாபுவுக்கு ரஜினிகாந்தின் நட்பும் பரிசாக கிடைத்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முதல் திரைப்படமும் இதுதான்.

இதையடுத்து ரஜினி - சரத்பாபு கூட்டணி என்றாலே மெகா ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு அண்ணாமலை மற்றும் முத்து என இரண்டு முத்தான படங்களில் இணைந்து நடித்திருந்தனர். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ரஜினியும், சரத்பாபு நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர். ரஜினி சிகரெட் பிடிப்பதை பார்த்தால் உடனே சிகரெட்டை பிடுங்கி எறியும் அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... என்ன ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, சரத்பாபு சீக்கிரமா போயிட்டாரு - அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்

எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல் ஜெண்டில்மேனாக வாழ்ந்து வந்த நடிகர் சரத்பாபு மல்டிபிள் மைலோமா என்கிற அரிய வகை புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக படுத்தபடுக்கையாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். 92 நாட்கள் சிகிச்சை அளித்து பலனளிக்காமல் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஐதரபாத் மருத்துவமனையில் சரத்பாபு மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் சுஹாசினி, ராதிகா சரத்குமார் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சென்னையில் தி-நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடல் 2 மணியளவில் இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவர் மறைந்தாலும், அவர் நடித்த படங்கள் என்றென்றும் மக்கள் மனதில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும்.

இதையும் படியுங்கள்... கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தாரா சரத்பாபு?.. 92 நாள் சிகிச்சையில் நடந்தது என்ன? - சுஹாசினி வெளியிட்ட ஷாக் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios