கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தாரா சரத்பாபு?.. 92 நாள் சிகிச்சையில் நடந்தது என்ன? - சுஹாசினி வெளியிட்ட ஷாக் தகவல்

நடிகர் சரத்பாபு மல்டிபிள் மைலோமா என்கிற வகை கேன்சர் பாதிப்பால் தான் உயிரிழந்ததாக நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Suhasini maniratnam reveals sarathbabu dead because of Multiple myloma

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் சரத்பாபுப் நேற்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் செப்சிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் சென்னையில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு இன்று காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பதை தெரிவித்தார். அதன்படி அவர் கூறியதாவது : “சரத்பாபு கடந்த 92 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முதல் 2 மாதங்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உறவினர்கள் அனைவரும் பெங்களூருவில் இருந்ததால், அவருக்கு லேசாக காய்ச்சல் ஏற்ப்பட்டதால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு என்ன பாதிப்பு என்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதையடுத்து தான் அவருக்கு மல்டிபிள் மைலோமா என்கிற நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் அவரது தங்கை இருந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!

அப்போது நானும் சிரஞ்சீவியும் சென்று மருத்துவர்களிடம் பேசினோம். தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்ற முயல்வதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவர்கள் எவ்ளோ முயற்சி பண்ணியும் சரத்பாபுவை காப்பாற்ற முடியவில்லை. நான் சரத்பாபு உடன் 30 முதல் 40 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய முதல் படமான நெஞ்சத்தை கிள்ளாதே முதல் என்னுடன் சரத்பாபு நடித்திருக்கிறார். 

சரத்பாபுவுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது. அதோடு நன்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்பவர். அப்படி இருந்தும் மல்டிபிள் மைலோமாவால் அவர் பாதிக்கப்பட்டதால் அதன் பாதிப்பு தீவிரமடைந்து நான்காவது ஸ்டேஜில் தான் தெரியவந்ததால் தான் அவரை இழக்க நேரிட்டது. அவர் ரொம்ப பிட்டா இருந்தாரு, சைவம் தான் சாப்பிடுவாரு, இயற்கை உணவுகள் தான் அதிகம் சாப்பிடுவாரு அப்படி இருந்தும் அவருக்கு இந்த நிலைமை என கூறினார்.

சுஹாசினி கூறிய மல்டிபிள் மைலோமா என்பது ஒரு வகை கேன்சர் பாதிப்பாகும். அதன் பாதிப்பு தீவிரமடைந்து நான்காவது ஸ்டேஜை அடைந்தபின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டதால் சரத்பாபு உயிரை காப்பாற்ற முடியவில்லை என சுஹாசினி கூறி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... என்ன ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, சரத்பாபு சீக்கிரமா போயிட்டாரு - அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios