பிப்ரவரி 25ல் தமிழ்நாடு வரும் அமித்ஷா! கூட்டணி குறித்து முக்கிய முடிவு? சூடுபிடிக்கும் அரசியல் களம்!

Published : Feb 17, 2025, 02:47 PM IST
பிப்ரவரி 25ல் தமிழ்நாடு வரும் அமித்ஷா! கூட்டணி குறித்து முக்கிய முடிவு? சூடுபிடிக்கும் அரசியல் களம்!

சுருக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25ல் தமிழ்நாடு வருகிறார். அப்போது தேர்தல் தொடர்பாக அவர் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அமித்ஷா தமிழ்நாடு வருகை 

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பிப்ரவரி 25ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 25ம் தேதி கோவை வருகிறார். 26ம் தேதி கோவை பீளமேட்டில் மூன்று மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். 

இதனைத் தொடர்ந்து 26ம் தேதி மாலை கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

கூட்டணி குறித்து முக்கிய முடிவு 

சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழ்நாடு பாஜக எவ்வாறு தயாராக வேண்டும்? தமிழ்நாட்டில் பாஜகவை மேலும் வலுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து அமித்ஷா தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார். மேலும் இந்த ஆலோசனையின்போது கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் யார்? யார்? போட்டியிட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாத நிலையில், கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாஜகவை எதிர்த்த ஓபிஎஸ் 

தமிழ்நாடு வரும் அமித்ஷாவுக்கு கோவையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து கோவை பாஜகவினர் ஆலோசனை கூட்டமும் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இது மட்டுமின்றி பாஜக கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் மத்திய அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமித்ஷா தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!