மத்திய அமைச்சர் கூறியதை ஏற்கவே முடியாது.! இறங்கி அடிக்கு ஓபிஎஸ்

Published : Feb 17, 2025, 12:03 PM IST
மத்திய அமைச்சர் கூறியதை ஏற்கவே முடியாது.! இறங்கி அடிக்கு ஓபிஎஸ்

சுருக்கம்

மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளார். அண்ணா காலத்திலிருந்தே தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது.

தேசிய கல்வி கொள்கை

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.  இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய 2ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே   முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று “மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், 

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

தமிழகத்தில் இரு மொழி கொள்கை

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்” என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர்  புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள்.! நாற்காலி நிரந்தரமானது அல்ல- அண்ணாமலைக்கு சீமான் எச்சரிக்கை

நிதியை உடனடியாக விடுவியுங்கள்

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏறு கொள்ளக் கூடியதல்ல.

இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம். எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!