MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

2 Min read
Ajmal Khan
Published : Feb 17 2025, 07:55 AM IST| Updated : Feb 17 2025, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு

ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வழிகாட்டியாக உள்ளனர். அந்த வகையில் மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வழங்குவது வரை முக்கிய பங்காற்றுகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் வகுப்பறையில் நின்று கொண்டே ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் நிலை உள்ளது. இதனால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

27
ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை

பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 அன்று 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்வது தொடர்பான இத்திட்டச் சார்ந்த செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து  அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாணையில், முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

37
ஆசிரியர்களுக்கு இலவச உடல் பரிசோதனை

ஆசிரியர்களுக்கு இலவச உடல் பரிசோதனை

மேலும், பள்ளிக் கல்வித்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு (Package-1 Gold Scherms) திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பரிசோதனைகளை மேற்கொள்ள பார்வையில் காணும் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. Complete Hoermogram

2. ESR Urine Analysis

3. Blood Sugar F & PP

4. Urea, Creatinine, Uric Acid

5. Lipid Profiles

6. Total Cholesterol (HDL&LDL)

7. Triglycerides, Total Cholesterol HDL ratin

8. Liver Function Test

47
என்னென்ன மருத்துவ பரிசோதனை.?

என்னென்ன மருத்துவ பரிசோதனை.?

9. Serum Bilirubin(Total & direct)

10. AST, ALT,SAP, Total Protein And Albumin

11. Hba/Ag

12. Blood Grouping Typing

13. ECG

14. X-Ray Chest

15. USG Abdomen

16. Pap Smear

57
முதல் கட்டமாக 150 ஆசிரியர்கள்

முதல் கட்டமாக 150 ஆசிரியர்கள்

எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 50 வயதினை கடத்தவர்களில் வயது மூப்பு அடிப்படையில் தற்போது 150 ஆசிரியர்களை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதினை கடந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்ப படிவத்தின் படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த பள்ளியின் தலைமையாசிரிர்கள் உரிய பரிந்துரையுடன் 28.02.2025 க்குள் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

67
விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உத்தரவு

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உத்தரவு

பெறப்பட்ட விண்ணப்பங்களை 07.03.2025 க்குள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிசிலினை செய்து, 150 ஆசிரியர்களை தெரிவு செய்தல் வேண்டும். மேலும், தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை மாவட்ட அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமர்பித்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையினை தயாரித்து அதன் தகவல்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் தெரிவித்து ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

77
57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

 மாவட்ட வாரியாக 150 ஆசிரியர்களை தெரிவு செய்து (Package-1 Gold Scheme) திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கென தலா ரூ.1,50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்து 38 மாவட்டத்திற்கும் ரூ.57.00.000/- தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து அனுமதித்து ஆணை வழங்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved