மெகா வேலைவாய்ப்பு.. இந்தியா போஸ்ட்-ல் 12,828 காலி பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..
இந்தியா போஸ்ட்டில் காலியாக உள்ள 12,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12828 கிராமின் டக் சேவக் பணிக்கான அறிவிப்பை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஜூன் 11, 2023க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும், ஜூன் 12 மற்றும் 14, தங்கள் விண்ணப்பங்களை திருத்தம் செய்யலாம். இதன் மூலம் 12828 பணியிடங்களை நிரப்பப்படும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கிளை போஸ்ட் மாஸ்டர்கள், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்கள் மற்றும் கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
இதையும் படிங்க : தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதும்.. இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு !!
நிறுவனத்தின் பெயர் : | இந்தியா போஸ்ட் |
பணியிடத்தின் பெயர் : | கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் |
காலியிடங்களின் எண்ணிக்கை | 12828 |
ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி | மே 22, 2023 |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | ஜூன் 11, 2023 |
ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு | indiapostgdsonline.gov.in |
தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போது. விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு/மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலத்துடன் 10ஆம் வகுப்பின் மேல்நிலைப் பள்ளித் தேர்வின் தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது - 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது - 40 ஆண்டுகள்
விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது
- மாணவர்கள் Registration Tab-ஐ கிளிக் செய்து, அவர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் பல போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் - பதிவைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு வட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவில் விளம்பரம் செய்யப்படும் அனைத்து பதவிகளுக்கும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், அனைத்து பெண் வேட்பாளர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள், PwD விண்ணப்பதாரர்கள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்தியா போஸ்ட் வேலைவாய்ப்பின் அறிவிப்பு இதோ
இதையும் படிங்க : பிளஸ் 2 படித்திருந்தால் போதும் போதும்; மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்!
- india post dak sewak recruitment 2023
- india post gds
- india post gds kya hai
- india post gds new vacancy 2023
- india post gds online form 2023
- india post gds recruitment 2023
- india post gds recruitment 2023 apply online
- india post gds vacancy 2023
- india post office recruitment 2022
- india post office recruitment 2023
- indian post office recruitment
- post office gds recruitment 2023
- post office recruitment 2023
- post office recruitment 2023 apply online