- Home
- Career
- சாதாரண ஜிமெயில் வேண்டாம்! உங்கள் கம்பெனி பெயரிலேயே புரொபஷனல் 'பிசினஸ்' ஈமெயில் உருவாக்குவது எப்படி?
சாதாரண ஜிமெயில் வேண்டாம்! உங்கள் கம்பெனி பெயரிலேயே புரொபஷனல் 'பிசினஸ்' ஈமெயில் உருவாக்குவது எப்படி?
Business Email உங்கள் சாதாரண ஜிமெயிலை புரொபஷனல் பிசினஸ் ஈமெயிலாக மாற்றுவது எப்படி? 2026-க்கான முழுமையான வழிகாட்டுதல் இதோ! பிசினஸ்' ஈமெயில் உருவாக்குவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு தொழிலைத் தொடங்குகிறீர்கள் என்றால், வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். உங்களின் நிறுவனம் சார்பில் example@gmail.com என்று ஒரு சாதாரண ஈமெயிலில் இருந்து மெயில் அனுப்புவதற்கும், info@yourcompany.com என்ற உங்கள் பிராண்ட் பெயரிலான ஈமெயிலில் இருந்து அனுப்புவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இரண்டாவது முறையில் அனுப்புவது உங்கள் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையையும் (Credibility), தொழில்முறை அணுகுமுறையையும் (Professionalism) காட்டுகிறது. அதுமட்டுமின்றி, ஹேக்கிங், ஃபிஷிங் (Phishing) போன்ற சைபர் தாக்குதல்களில் இருந்தும் பிசினஸ் ஈமெயில்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. சரி, உங்கள் சாதாரண ஜிமெயிலை பிசினஸ் ஈமெயிலாக மாற்றுவது எப்படி? இதோ 2026-க்கான எளிய வழிமுறைகள்!
ஸ்டெப் 1: சரியான டொமைன் பெயரை வாங்குங்கள் (Domain Name)
முதல் படியாக, உங்கள் நிறுவனத்தின் பெயரில் ஒரு இணைய முகவரியை (Domain Name) வாங்க வேண்டும் (உதாரணமாக: yourcompany.com). இதனை GoDaddy, Namecheap போன்ற தளங்களில் எளிதாக வாங்கிக் கொள்ளலாம். உங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு சுருக்கமான, எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
ஸ்டெப் 2: கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) பதிவு
டொமைன் வாங்கிய பிறகு, 'கூகுள் வொர்க்ஸ்பேஸ்' (Google Workspace) தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது கூகுள் வழங்கும் கட்டண சேவை என்றாலும், இதன் மூலம் உங்கள் புதிய டொமைன் பெயரைக் கொண்டு ஜிமெயிலைப் பயன்படுத்த முடியும். அத்துடன் Drive, Meet, Calendar, Docs போன்ற அனைத்து பிசினஸ் டூல்களையும் ஒரே இடத்தில் பெறலாம்.
ஸ்டெப் 3: டொமைன் வெரிஃபிகேஷன் (Domain Verification)
பதிவு செய்தவுடன், நீங்கள் வாங்கிய டொமைன் உங்களுடையது தானா என்பதை கூகுள் சரிபார்க்கும். இதற்கு கூகுள் வழங்கும் ஒரு 'வெரிஃபிகேஷன் கோர்டை' (Verification Code) உங்கள் டொமைன் செட்டிங்ஸில் அப்டேட் செய்ய வேண்டும். இதைச் செய்தவுடன், உங்கள் டொமைன் நேரடியாக கூகுள் சர்வர்களுடன் இணைக்கப்பட்டுவிடும்.
ஸ்டெப் 4: MX ரெக்கார்டு அப்டேட் (MX Records Update)
அடுத்ததாக, உங்கள் டொமைனின் கன்ட்ரோல் பேனலில் (Control Panel) சென்று பழைய MX ரெக்கார்டுகளை நீக்கிவிட்டு, கூகுள் வழங்கும் புதிய MX ரெக்கார்டுகளைச் சேர்க்க வேண்டும். இது இணையத்தில் உங்கள் ஈமெயில்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். இதைச் செய்து முடித்த சில மணி நேரங்களில், உங்கள் புதிய பிசினஸ் ஈமெயில் முகவரிக்கு வரும் மெயில்கள் அனைத்தும் நேரடியாக உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸிற்கே (Inbox) வந்துவிடும்.
இதன் பிறகு, சேல்ஸ் (sales@yourcompany.com), சப்போர்ட் (support@yourcompany.com) என உங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி ஈமெயில் ஐடிக்களை உருவாக்கி உங்கள் பிசினஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்!

