நம்ம பர்சனல் விஷயத்தை கூகுள் பார்க்குமா? ஜிமெயில், போட்டோஸ் பற்றி வந்த அதிரடி அப்டேட்!
Google கூகுள் தேடலில் புதிய AI வசதி! உங்கள் ஜிமெயில் மற்றும் போட்டோக்களில் இருந்து தகவல்களைத் தேடித் தரும். முழு விபரம் உள்ளே.

Google இனி உங்கள் ஜிமெயில், போட்டோஸ் இரண்டையும் ‘சர்ச்’ செய்தே பதில் சொல்லும்!
கூகுள் தனது தேடுப்பொறியில் (Search Engine) ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. நாம் வழக்கமாக இணையத்தில் தகவல்களைத் தேடுவோம். ஆனால், இனி கூகுள் தேடல் உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் மாறப்போகிறது. கூகுளின் புதிய ‘AI Mode’, உங்கள் அனுமதியுடன் உங்கள் ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகியவற்றில் உள்ள தகவல்களைத் தேடி, உங்களுக்குத் தேவையான பதிலைத் துல்லியமாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்களைத் தேடுவது எப்படி?
வழக்கமாக "விமான டிக்கெட் எப்போது?" என்று தேடினால், பொதுவான தகவல்களைத் தான் கூகுள் காட்டும். ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம், "எனது அடுத்த விமானப் பயணம் எப்போது?" என்று கேட்டால், கூகுள் AI உங்கள் ஜிமெயிலில் உள்ள டிக்கெட் விவரங்களை படித்து, சரியான நேரத்தையும் தேதியையும் உங்களுக்குக் காட்டும். இதற்காக நீங்கள் ஜிமெயில் ஆப்பிற்குள் சென்று தேட வேண்டிய அவசியமில்லை.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் மேஜிக்
இதேபோல, கூகுள் போட்டோஸிலும் இந்த AI புகுந்து விளையாட உள்ளது. உதாரணமாக, "2024-ல் நான் ஊட்டி சென்றபோது எடுத்த புகைப்படங்களைக் காட்டு" என்று கூகுள் சர்ஸில் டைப் செய்தால் போதும். அது தானாகவே உங்கள் கூகுள் போட்டோஸ் ஆல்பத்தில் இருந்து அந்தப் குறிப்பிட்ட புகைப்படங்களைத் தொகுத்துத் தரும். தேதிகள் அல்லது இடங்களை வைத்து மட்டுமின்றி, "நான் சிரிக்கும் போட்டோ என்று கேட்டால் கூடத் தேடித் தரும் அளவுக்கு இது புத்திசாலித்தனமானது.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா?
இப்படி நமது பர்சனல் விஷயங்களை கூகுள் படிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதற்கு கூகுள் தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் "Opt-in" முறையில்தான் செயல்படும். அதாவது, நீங்கள் விருப்பப்பட்டு அனுமதி (Permission) கொடுத்தால் மட்டுமே AI உங்கள் தகவல்களைப் பார்க்கும். மேலும், இந்தத் தரவுகள் எதுவும் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்றும், உங்கள் தேடல் முடிவுகள் உங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூகுள் உறுதியளித்துள்ளது.
எளிமையான பயன்பாடு
இந்த வசதி மூலம், மருத்துவ ரிப்போர்ட்டுகள், பழைய பில்கள், பயணத் திட்டங்கள் போன்றவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிக எளிதாகிவிடும். பல ஆப்ஸ்களை ஓபன் செய்து நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம். ‘Gemini’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் இந்த அம்சம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு விரைவில் முழுமையாகக் கிடைக்கும்.
எதிர்காலத் தொழில்நுட்பம்
இதுவரை நாம் தேடுபொறியை உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தினோம். இனி நம்மைப் பற்றியே தெரிந்துகொள்ளவும், நமது டிஜிட்டல் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் கூகுள் சர்ச் பயன்படப் போகிறது. இது டிஜிட்டல் உதவியாளர் (Digital Assistant) தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

