சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக நாளை மாலை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது அரை மணி நேரம் மட்டும் பாஜக நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசுகிறார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்டிருக்கிறார்கள். இந்த சந்திப்பு நடக்குமா ? நடக்காதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

09:36 PM (IST) Jul 27
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள்.
08:18 PM (IST) Jul 27
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மக்கள் குளித்துக்கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 5 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். அதில், பண்ருட்டியை சேர்ந்த கலாவதி, சென்னையை சேர்ந்த மல்லிகா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
07:44 PM (IST) Jul 27
நடிகர் அஜித் திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அங்கு நடிகர் அஜித்தை பார்க்க குவிந்தனர். இந்த தகவல் நடிகர் அஜித்திற்கு தெரியவர, அவர் உடனடியாக திருச்சி ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.மேலும் படிக்க
06:50 PM (IST) Jul 27
நடிகர் தனுஷ் நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி முதலில் அவர் நடித்துள்ள வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.மேலும் படிக்க
05:53 PM (IST) Jul 27
நடிகர் வினீத் தட்டில் டேவிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்க வந்தவரை நடிகர் ஒருவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் படிக்க
05:02 PM (IST) Jul 27
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் உள்ள மோடியின் படத்தை கருப்பு மையால் அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
04:59 PM (IST) Jul 27
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சசிகலா மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 2வது வாரம் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு வர உள்ளது.
03:34 PM (IST) Jul 27
கடலூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
03:23 PM (IST) Jul 27
மின் கட்டணம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த மின் கட்டணமே. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. தைரியமிருந்தால் மின்துறை மீது வழக்கு தொடரட்டும் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
03:11 PM (IST) Jul 27
அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி ராகிங் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
03:05 PM (IST) Jul 27
ஆண்ட்ரியா பச்சை நிற ட்ரவுசர்,ஜிம்மிஸ் மட்டும் அணிந்து மேல் கோட்டை கழட்டி கையில் பிடித்தவாறு கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க... ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..பச்சை வண்ண டவுசர் மட்டும் அணிந்து...அலப்பறை பண்ணும் நாயகி!
03:03 PM (IST) Jul 27
நிர்வாண காட்சியில் நடிக்க நான் குட்டியான உடை அணிந்திருந்தேன். எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அந்த உடை மேலே இழுத்து விட்டால் அணிந்திருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான் என கூறியுள்ளார் பிரிகிடா.
மேலும் படிக்க...என்னது நிர்வாணமாக நடித்தேனா? உண்மையை உடைத்த இரவின் நிழல் நாயகி!
02:55 PM (IST) Jul 27
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - இதுதான் மெனு
02:08 PM (IST) Jul 27
சென்னையில் அஜித் இன்றி ஏ.கே 61 -ன் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கின் போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!
01:51 PM (IST) Jul 27
ஸ்ரீமதி, சரளா மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் பதில் சொல்வாரா? என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க
01:27 PM (IST) Jul 27
சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமேன்’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
மேலும் படிக்க...'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!
01:07 PM (IST) Jul 27
மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் எந்த இடத்திலும் இடம்பெறவில்லையென புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
12:44 PM (IST) Jul 27
கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவார கொண்டா இது வேண்டாம் என பதிலளிக்கிறார்.
மேலும் படிக்க...அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!
12:44 PM (IST) Jul 27
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பள்ளி நிர்வாகிகள் இருவர், ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி உத்தரவு மேலும் படிக்க
12:42 PM (IST) Jul 27
சென்னை திரும்பி உள்ள இவரின் ஏர்போர்ட் வீடியோ நேற்று வைரலானது. இதில் அஜித் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் நடிகரை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
மேலும் படிக்க...பைக் உலாவை தொடர்ந்து வைரலாகும் அஜித்தின் ரைபிள் கிளப் வீடியோ !
12:37 PM (IST) Jul 27
தயவுசெய்து பள்ளிக்கூடம் வரும் மாணவர்கள் காலை சிற்றுண்டி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உடற்பயிற்சி செய்வதுடன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க
12:32 PM (IST) Jul 27
சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசு சார்ப்பில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். விமானத்தில் செல்லும்போதே இவர்கள் செஸ் விளையாடிச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:10 PM (IST) Jul 27
சென்னையில் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. வெயில் காரணமாக மயக்கம் ஏற்பட்டதும் தண்ணீர் அளித்து மேடையிலேயே அமர வைக்கப்பட்டார்மேலும் படிக்க
12:06 PM (IST) Jul 27
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மாணவி மரணம் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பள்ளியில் முதல்வர், செயலாளர், தாளாளர், ஆசிரியைகள் என ஐந்து பேரும் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிசிஐடி தரப்பில் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
11:58 AM (IST) Jul 27
காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு இடங்களில் 'சைட் கிளியரன்ஸ்' கொடுத்தபின்பு, முதலமைச்சரின் ஆலோசனைப்படி எந்த இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு , ஆணையத்துக்கு முன்மொழியப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.மேலும் படிக்க
11:51 AM (IST) Jul 27
அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். விடியா திமுக ஆட்சியில் மக்கள் துன்பங்கள் ஏராளம். தமிழ்நாட்டில் மக்கள் வேதனையால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என அனைத்து கட்டணங்களையும் விடியா அரசு உயர்த்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து நாட்டு மக்களுக்கு என்ன செய்தது விடியா திமுக அரசு.
11:15 AM (IST) Jul 27
திருச்சியில் நடக்கும் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். 10 மீட்டர் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் நடிகர் அஜித் கலந்துக்கொண்டார்.
11:06 AM (IST) Jul 27
11:06 AM (IST) Jul 27
கள்ளக்காதலர்களை ஏவி, கணவரை துண்டு, துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
10:52 AM (IST) Jul 27
மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது என்று மாணவர்கள் மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும்1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டத்தில் நேற்று கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.
10:40 AM (IST) Jul 27
மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது. அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர் என்கிற விமர்சனம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார் கேஆர்கே.
மேலும் படிக்க...சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே
10:38 AM (IST) Jul 27
மாணவர்களுக்கு அறிவு, உடல், மனம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் தற்கொலைகள் உளச்சோர்வைத் தருவதாக முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
10:36 AM (IST) Jul 27
மேல்மருத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆடிப்பூரம் திருவிழா நடக்கிறது. இதனைமுன்னிட்டு, அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
10:23 AM (IST) Jul 27
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் இல்லை; இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து, எல்லா இடங்களிலும் அவரது படத்தை இடம்பெற செய்ய வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
10:21 AM (IST) Jul 27
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் குறித்து விவாதிக்க திமுகவின் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். விவாதம் நடத்த அரசு முன்வராததால் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
10:10 AM (IST) Jul 27
ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக இன்று வரை கொண்டாப்பட்டு வருகிறது.
10:09 AM (IST) Jul 27
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்க்கு பிறகு அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலை நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:08 AM (IST) Jul 27
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10:01 AM (IST) Jul 27
சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தவர் தனுஷ் அவரையும் எனக்கு உதவிய அனைவரையும் நான் மகான் என்று தான் சொல்வேன் என உருக்கமாக பேசியுள்ளார் பொன்னம்பலம்.
மேலும் படிக்க...விஜயகாந்தை பார்த்தால் செத்து விடுவேன் ..பொன்னம்பலத்தின் உருக்கமான பேட்டி!
10:00 AM (IST) Jul 27
அப்படின்னா அது என்னன்னு தெரியாமலேயே நடிச்சிட்டீங்களா என கிண்டலாக கேட்டுள்ளார் ரங்கநாதன். அதற்கு நான் இந்த படத்தில் கமிட்டாகும்போது படத்தில் படத்திற்கு பெயர் வைக்கவில்லை ஒரு மாதத்திற்கு முன்னாடி தான் பெயர் வைத்தார்கள் என்று கூறியுள்ளார் துல்கர்
மேலும் படிக்க...ராமமா? நாமமா? துல்கர் சல்மானை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்..கடுப்பான நாயகன்