தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மறந்த கட்சி திமுக. அதிமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் முடக்கிய கட்சி விடியா திமுக. பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. போதைப் பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதை மறைக்க அதிமுகவினர் மீது பொய் வழக்கு தொடரப்படுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் துணிவுடன் எதிர்கொள்ளும் சக்தி கொண்ட இயக்கம் அதிமுக என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜூலை 25ம் தேதி முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஆனால், சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிடிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க;- அதிமுகவில் விரைவில் தேர்தல்..பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி - ஓபிஎஸ் அதிர்ச்சி !

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி;- அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். விடியா திமுக ஆட்சியில் மக்கள் துன்பங்கள் ஏராளம். தமிழ்நாட்டில் மக்கள் வேதனையால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என அனைத்து கட்டணங்களையும் விடியா அரசு உயர்த்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து நாட்டு மக்களுக்கு என்ன செய்தது விடியா திமுக அரசு.
அதிமுகவினர் மீது திமுக அரசு திட்டமிட்டு வழக்குப்போடுகிறது. திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதை மறைக்க அதிமுகவினர் மீது பொய் வழக்கு தொடரப்படுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் துணிவுடன் எதிர்கொள்ளும் சக்தி கொண்ட இயக்கம் அதிமுக. நான் ஆட்சிக்கு வந்ததபோது 3 மாதத்தில், 5 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஆரூடம் கூறினார்கள். ஆனால், சிறப்பான ஆட்சியை தந்தேன்.
இதையும் படிங்க;- திமுக ஆட்சிக்கு முடிவுக்கற்ற ஒரே தலைவர் இபிஎஸ் தான்.. எஸ்.பி.வேலுமணி அதிரடி சரவெடி..!

தமிழகதத்தில் ஏற்படும் மின்தடையால் மீண்டும் ஒருமுறை திமுக ஆட்சி கவிழும். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஒப்புதல் வாக்குமூலம் போல, மின்தடையால் திமுக ஆட்சியை இழந்தது. தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தபோது தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். விரைவில் அதுபோன்ற நிலை வரும். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு உபரி மின்சாரம் தயாரிக்கப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மறந்த கட்சி திமுக. அதிமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் முடக்கிய கட்சி விடியா திமுக. பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. போதைப் பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி முதல் பெட்டிக் கடை வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது. நிர்வாக திறமை இல்லாமல் போட்டோ ஷூட் மட்டுமே ஸ்டாலின் நடத்தி வருகிறார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்னிடம் இருக்கிறது எனக் கூறிய ஸ்டாலின் ஏன் இன்னும் அதனை ரத்து செய்யவில்லை? என கேள்வியை எழுப்பினார்.
