நெல்லையில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை..! அதிர்ச்சியூட்டும் பின்னனி காரணங்கள்

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்க்கு பிறகு அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலை நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Two students committed suicide in Nellai on the same day

தொடரும் மாணவர்கள் தற்கொலை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம்தேதி பள்ளி விடுதியில் உள்ள மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் மாணவி மரணம் தொடர்பாக தமிழகம் முழுவதும் விவாதப்பொருளாக மாறியது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டது. மேலும் சமூக வலை தளத்தில் மாணவி மரணம் தொடர்பாக 90% செய்திகள் பகிரப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மறைவதற்க்குள் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவி கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து முயற்ச்சித்தார். இதனையடுத்து மாணவியை மீட்ட கல்லூரி நிர்வாகம் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

Two students committed suicide in Nellai on the same day

ஒரே நாளில் நெல்லையில் இரண்டு தற்கொலை

இந்த சம்பவம் நடைபெற்ற அன்றே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி, விடுதி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உயிரழப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவியின் உடல் நேற்று உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி வன்முறை.. போலி தகவலை பரப்பியவருக்கு ஆப்பு.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

Two students committed suicide in Nellai on the same day

இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையம் அருகேயுள்ள முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் பாட நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தியுள்ளான். இதைப்பார்த்த ஆசிரியர்கள் மாணவனை கண்டித்துள்ளனர். மேலும் பெற்றோரை அழைத்து மாணவன் நடவடிக்கை தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவன் பயன்படுத்து வந்த மொபைல் போனை தாய் பறித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் மருதம்நகர் ரயில்வே கேட் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

Two students committed suicide in Nellai on the same day

கல்லூரி கட்டணம்- மாணவி தற்கொலை

இதே போல நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவர்  முத்துக்குமார், இவர் தனது மகளான பாப்பா(18) என்பவரை  பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.அங்கு கல்வி கட்டணமாக 12 ஆயிரம் ரூபாயை முத்துக்குமார் சிரமப்பட்டு செலுத்தியுள்ளார். தனது உழைப்பில் கிடைத்த அனைத்து பணத்தையும் கல்லூரி கட்டணத்திற்காக செலுத்தியதால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி சிரமப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து நேற்று முத்துக்குமார் தனது மனைவியோடு மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் மாணவி பாப்பா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Two students committed suicide in Nellai on the same day

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மாணவி  பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் தொடர் தற்கொலைகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது என்பதை மாணவர்களுக்கு விழிப்புணர்வு மூலம் புரிய வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கள்ளிக்குறிச்சி கலவரம்.. தீ வைத்து கொளுத்தப்பட்ட போலீஸ் வாகனம்..19 வயது நபர் கைது..

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios