கள்ளிக்குறிச்சி கலவரம்.. தீ வைத்து கொளுத்தப்பட்ட போலீஸ் வாகனம்..19 வயது நபர் கைது..
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீவைத்த 19 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த 17 ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டதாக 302 பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி எனும் மாணவி கடந்த 13 ஆம் தேதி, பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மாணவியின் பெற்றோர் மரணத்தில் சந்தேக இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டம் கடந்த 17 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம்.. முழு பொறுப்பும் தலைமையாசிரியர் தான்.. பள்ளிக்கல்வித்துறை பரபர..
பள்ளியை முற்றுக்கையிடுவதாக பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில் , அவர்களை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறின. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கும்பல், அங்கு நின்றிருந்த 20 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மாணவர்களின் அசல் சான்றிதழ், மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை தீ வைத்து கொளுத்தினர்.மேலும் காவல்துறையினர் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் விழுப்புரம் டிஐஜி உட்பட 100 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். தொடந்து அப்பகுதி போலீசாரின் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 144 தடையுத்தரவு போடப்பட்டது. அண்டை மாவட்டங்களில் போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு ஆயுதப் படை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைத்தனர். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டதாக 302 பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க:அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !
அதில் 108 பேர் நீதிபதி உத்தரவு படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக 19 வயது நிதிஷ் வசந்த என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கலவரத்தின் போது கட்டிடத்தை இடித்த மனிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறையின் போது பதிவான வீடியோ காட்சிகளின் அடிபடையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனிஷை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.