சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே
மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது. அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர் என்கிற விமர்சனம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார் கேஆர்கே.
கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சமந்தா ராஜமௌலியின் 'ஈ' படத்தின் மூலம் பேன் இந்தியா நடிகையாக மாறினார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் தற்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.
ஃபேமிலி மேன் தொடர் மூலம் அங்கு பிரபலமடைந்துவிட்டார் சமந்தா. அதோடு சமீபத்தில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் சமந்தா பங்கேற்றதும் அங்குஇருவரும் ஓ சொல்ட்ரியா மாமா பாடலுக்கு நடனமாடியதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அது குறித்தான புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகின. அதோடு தான் பிரபல நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிக்க அதிக பணம் செலவிட்டதாக கூறி குழப்பத்தையும் ஏற்படுத்தினார் சமந்தா.
மேலும் செய்திகளுக்கு..ராமமா? நாமமா? துல்கர் சல்மானை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்..கடுப்பான நாயகன்
Samantha
முன்னதாக குடும்பப் பாங்கான பெண் போல சினிமா துறையில் அறிமுகமான சமந்தா, விவாகரத்திற்கு பிறகு தனது உடைகளை மிகவும் குறைத்துவிட்டார். கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று அவர் அவ்வப்போது வெளியிடும் குதூகலமான புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. அதோடு தனது உடலையும் கட்டுமஸ்தாக மாற்றி வரும் இவர் தற்போது சண்டை பயிற்சிக்கான ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...விஜயகாந்தை பார்த்தால் செத்து விடுவேன் ..பொன்னம்பலத்தின் உருக்கமான பேட்டி!
இந்நிலைகள் பாலிவுட் சினிமா விமர்சகர் ஒருவர் சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி நடிகர்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல் ஆர்கான் என்பவர், சமீபத்தில் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்ததற்கு அமீர்கான் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விமல்!
அதோடு தனது ட்விட்டரில், மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை எப்படி அமீர்கான் வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது. அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர் என்கிற விமர்சனம் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு பேசும் பொருளாக மாறி வருகிறது.
நாகசைதன்யா, அமீர்கான் இருவரும் வரவிருக்கும் Laal Singh Chaddha என்னும் இந்தி மொழி படத்தில் ராணுவ வீரர்களாக இணைந்து நடித்துள்ளனர். அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.