சென்னையின் புதிய விமானநிலையம் எங்கு அமையவுள்ளது..? அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு இடங்களில் 'சைட் கிளியரன்ஸ்' கொடுத்தபின்பு, முதலமைச்சரின் ஆலோசனைப்படி எந்த இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு , ஆணையத்துக்கு முன்மொழியப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Chennai 2nd Airport - Minister Thangam Thennarasu Press Meet

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லியில் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். அவருடன் தமிழக தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழக அரசு இல்ல உறைவிட ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி ஆகியோர் உடன் இருந்தனர். 

Chennai 2nd Airport - Minister Thangam Thennarasu Press Meet

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் சென்னையில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றார். மேலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட 4 இடங்களில் கல்பாக்கம் மற்றும் தாம்பர்ம் ஏர்வேஸ் ஆகிய 2 இடங்கள் தகுதியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:Viral : ஸ்டிக்கர் அரசாங்கத்திற்கு ஸ்டிக்கர்! - செஸ் ஒலிம்பியாட் பேனரில் மோடி ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு இடங்களில் 'சைட் கிளியரன்ஸ்' கொடுத்தபின்பு, முதலமைச்சரின் ஆலோசனைப்படி எந்த இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு , ஆணையத்துக்கு முன்மொழியப்படும் என்றார்.

Chennai 2nd Airport - Minister Thangam Thennarasu Press Meet

மேலும் சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதி அமைக்க இடம் ஒதுக்கிதர கேட்கப்பட்டது. தொடர்ந்து கோவை, திருச்சி போன்ற தமிழகத்தில் உள்ள மற்ற விமானநிலையங்களின் விரிவாக்க பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதே போல் கருரில் விமான நிலையம் அமைக்கவும் கேட்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்ததாக அவர் கூறினார். 

மேலும் படிக்க:இபிஎஸ் தூதுவராக செயல்பட்டாரா தம்பிதுரை...! மோடியுடன் திடீர் சந்திப்பில் பேசியது என்ன..?

மதுரை விமானநிலையத்தை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சர்வதேச விமான நிலையமாக அமைக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. மேலும் சேலம் விமானநிலையத்தில், விமான பயிற்சி பள்ளியை அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.  மதுரை விமானநிலையத்தில் விரிவாக்கப் பணிகளை பொறுத்தவரை ஏறக்குறைய 90 சதவீதம் முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios