தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், கடந்த ஜனவரி 2 முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் பிற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11:58 PM (IST) Jan 30
பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
11:21 PM (IST) Jan 30
நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
10:42 PM (IST) Jan 30
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
09:39 PM (IST) Jan 30
தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
09:16 PM (IST) Jan 30
திஷா பதானி, ஜான்வி கபூர் முதல் அனன்யா பாண்டே வரை பாலிவுட் நடிகைகள் கடற்கரையில் எடுத்த லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
07:19 PM (IST) Jan 30
பாஜகவின் நிரூப்பிதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர் பாலு பேசிய வீடியோ முழுமையானது. - அண்ணாமலை பேட்டி.
06:47 PM (IST) Jan 30
இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
05:53 PM (IST) Jan 30
ஃபார்முலா பற்றி மாணவனுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை முழங்கையால் அடித்து, கழுத்தை நெரிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
05:16 PM (IST) Jan 30
டிஆர் பாலு பேசிய முழு வீடியோவை கட் & பேஸ்ட் செய்து அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார் திமுகவை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன்.
02:36 PM (IST) Jan 30
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
01:48 PM (IST) Jan 30
திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் வம்சி, விஜய்யுடன் படம் எடுத்தாச்சு, அடுத்தது அஜித்துடன் எப்போது கூட்டணி அமைப்பீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்தார். மேலும் படிக்க
12:57 PM (IST) Jan 30
நடிகை அமலா பால் தற்போது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்துள்ளார். ரோப் கார் மூலம் தனது தாய் மற்றும் தனது தம்பியின் மனைவியுடன் கோவிலுக்கு சென்ற அமலாபால் அங்கு எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். மேலும் படிக்க
12:33 PM (IST) Jan 30
100 ஆண்டுகால கோயிலை தான் இடித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட நிலையில், இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என திமுகவினர் உண்மையான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
12:04 PM (IST) Jan 30
நடிகர் நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நரேஷ் பாபு, ரம்யா ரகுபதி தன்னை கொல்ல முயற்சி செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்ததில் இருந்தே ரம்யா தன்னை டார்ச்சர் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் படிக்க
11:34 AM (IST) Jan 30
காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகியை நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி கடுமையாக சாடி உள்ளார். மேலும் படிக்க
10:23 AM (IST) Jan 30
நடிகை கீர்த்தி சுரேஷ், 13 வருடமாக தனது பள்ளித் தோழனை காதலித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்து அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க
09:46 AM (IST) Jan 30
நடிகையும், பாஜகவின் முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
09:35 AM (IST) Jan 30
ஏகே 62 படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், டுவிட்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சைலண்டாக செய்துள்ள வேலை அஜித் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. மேலும் படிக்க
09:17 AM (IST) Jan 30
நயன்தாரா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அவர் கதையின் நாயகியாக நடித்த நெற்றிக்கண், ஓ2, கனெக்ட், ஐரா, கொலையுதிர் காலம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தன. இதனால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் நயன். மேலும் படிக்க
08:43 AM (IST) Jan 30
எடப்பாடி தரப்பை தான் அதிமுக என மக்கள் நினைக்கின்றனர், இரட்டை இலை சின்னம் கிடைக்கவே காத்துக்கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
08:42 AM (IST) Jan 30
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை 9 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், அடுத்த வாரம் எண்ட்ரி கொடுக்க உள்ள 10வது போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
07:53 AM (IST) Jan 30
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கே எஸ் அழகிரி கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு திரிகிறார் கழட்டிப் பார்த்தால் தான் உண்மை நிலை தெரியும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
07:24 AM (IST) Jan 30
இந்தியாவின் இலக்கை அடைய ஐந்து மந்திரங்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடையமுடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..