இனி இந்த மாவட்டங்களுக்கு இவர்கள் தான் கலெக்டர்.. ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் - முழு விபரம் !!
தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப்பை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த குமரகுருபரன்,தகவல் தொழில்நுட்ப துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி மாவட்ட ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியராக கிராந்திகுமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?