கை,கால்களை வெட்டுவேன், கொலை செய்வேன் என ரவுடிகள் போல் செயல்படும் திமுக அமைச்சர்கள்- ஸ்டாலினை விளாசும் பாஜக

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கே எஸ் அழகிரி கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு திரிகிறார் கழட்டிப் பார்த்தால் தான் உண்மை நிலை தெரியும் என  பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Narayanan Tirupati has criticized the DMK ministers for acting like rioters

ரவுடிகளை போல் செயல்படும் அமைச்சர்கள்

கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவரும் ஊடகப் பொறுப்பாளருமான நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் திருப்பதி. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அவர்கள் வீரமணி மீது கை வைத்தால் வெட்டி விடுவேன் என்று கூறியுள்ளார். ஸ்டாலினை தீண்டினால் கையை வெட்டுவேன் என்று சொல்லி உள்ளார்.  கையை காலை வெட்டுவது, கல்லை தூக்கி எறிவது, அண்ணா மாலை அவர்களை கொலை செய்வேன் என்று மிரட்டுவது,

பிபிசி ஆவணப்படம்.. அதானி! நீட்! இலங்கை - திமுக எம்பிக்களுக்கு அறிவுரை செய்த முதல்வர் ஸ்டாலின்!

Narayanan Tirupati has criticized the DMK ministers for acting like rioters

திராவிட மாடல் ஆட்சியின் இழுக்கு

இதையெல்லாம் சொல்வது ரவுடிகள் அல்ல அவர்கள் அனைவரும் இன்றைக்கு அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார்கள். இதுபோல பேசியிருப்பது அனுபவம் வாய்ந்த ஒரு மக்களவை உறுப்பினர் இன்றைக்கு தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருக்கிற திராவிட மாடல் என்ற பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய இழுக்கு ஆகும். இதே போல பேசியவர்கள் பட்டியலில் தாமோ அன்பரசன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நாசர் என நீண்டு கொண்டே இருக்கிறது.

Narayanan Tirupati has criticized the DMK ministers for acting like rioters

திமுக சூழ்ச்சியை முறியடிப்போம்

கனிமொழி மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதே இல்லை என்று கூறுகிறார் கிட்டத்தட்ட முழுமையாக இந்தியாவில் தான் அதிகம் இளம் விதவைகள் இருக்கிறார்கள் என்று சொன்ன கனிமொழி மதுவை குறைப்போம் என்று சொல்லவில்லை என்று கூறுகிறார். 
கல்வியில் காசு என அனைத்து துறைகளிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இதை அண்ணாமலை தலைமையில் கடுமையாக எதிர்ப்போம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்போம். ராமர் பாலத்தை எந்த காரணத்தைக் கொண்டும் இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடமாட்டோம்.  சேது சமுத்திரம் திட்டத்திற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட பல லட்சம் டன் மணல் எங்கே சென்றது.

போலீசை விமர்சித்து கோஷம்..! விடுதலை சிறுத்தை கட்சி மீது நடவடிக்கை.? ஸ்டாலினுக்கு அட்வைஸ் சொல்லும் அண்ணாமலை

Narayanan Tirupati has criticized the DMK ministers for acting like rioters

அழகிரி கண்ணாடியை கழட்டி பார்க்கனும்

அதில் வந்த பணம் எவ்வளவு.? எத்தனை கருவூலத்தில் சேர்த்தார்கள்.?அதற்கு பதில் சொல்ல வேண்டும் திமுக அரசு மிகப்பெரிய கொள்ளை அடித்து வருவதாக குற்றம்சாட்டினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சம்பந்தமாக பேசிய நாராயணன் திருப்பதி கே எஸ் அழகிரி கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார் கழட்டி பார்த்தால் தான் தெரியும். பிபிசி என்பது ஆவணப்படம் அல்ல அது ஆணவப் படம்.  கம்யூனிஸ்டுகளுக்கு மான மரியாதை இருந்தால் இப்படி பேசுவார்களா திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார்எனவும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் வேறில்லை.! அறியாமையால் புதிய கல்வி கொள்கையை சிலர் எதிர்கின்றனர்-ஆர்.என்.ரவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios