வைரலான கீர்த்தி சுரேஷின் 13 வருட காதல் செய்தி... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த தாய் மேனகா
நடிகை கீர்த்தி சுரேஷ், 13 வருடமாக தனது பள்ளித் தோழனை காதலித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்து அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் சைரன், மாமன்னன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களும், தெலுங்கில் போலா சங்கர், தசரா போன்ற படங்களும் தயாராகி வருகின்றன. இவ்வாறு அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது காதல் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவியதோடு, இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று அவரது பெற்றோர் விளக்கம் அளித்தனர். இதையடுத்து தான் அந்த காதல் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதையும் படியுங்கள்... AK62 : டுவிட்டரில் சைலண்டாக விக்னேஷ் சிவன் பார்த்த வேலையால் அஜித் ரசிகர்கள் குழப்பம்! என்ன இப்படி பண்ணிட்டாரு?
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து மற்றுமொரு காதல் வதந்தி பரவியது. அதன்படி அவர் கேரளாவை சேர்ந்த ரெஸார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் இருவரின் திருமணத்துக்கும் பெற்றோர் சம்மதித்தாலும், கீர்த்தி படங்களில் பிசியாக நடித்து வருவதால் 3 ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவின.
இந்நிலையில், அந்த தகவலும் உண்மையில்லை வெறும் வதந்தி தான் என கீர்த்தி சுரேஷின் தாயார் நடிகை மேனகா விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி காட்டுத்தீ போல் பரவிய தகவல் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி சீசன் 4... அடுத்த வாரம் எண்ட்ரி கொடுக்க உள்ள சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் தெரியுமா?