MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • குக் வித் கோமாளி சீசன் 4... அடுத்த வாரம் எண்ட்ரி கொடுக்க உள்ள சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 4... அடுத்த வாரம் எண்ட்ரி கொடுக்க உள்ள சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை 9 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், அடுத்த வாரம் எண்ட்ரி கொடுக்க உள்ள 10வது போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 30 2023, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை ஜெயித்தனர். மூன்று சீசன்களின் ஹாட்ரிக் வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

நேற்று முன்தினம், ஆரம்பமான இந்நிகழ்ச்சியில், கடந்த சீசனைக் காட்டிலும் சற்று பிரம்மாண்டமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குக் வித் கோமாளி வெற்றிபெற முக்கிய காரணமே கோமாளிகள் தான். அந்த வகையில் இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை ஆகியோர் மட்டுமே பழைய கோமாளிகள் மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். அதில் முதல் வார நிகழ்ச்சியில் ஜிபி முத்து மட்டும் தான் சற்று கவனம் ஈர்த்தார். மற்றபடி எஞ்சியுள்ள புதிய கோமாளிகள் பெரியளவில் சோபிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... ரூட்டை மாற்றும் நயன்தாரா! தொடர்ந்து சொதப்பல்... இனி அந்த மாதிரி படங்களுக்கு நோ சொல்ல முடிவு

34

அதேபோல் குக்குகளை பொறுத்தவரை விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய ஷிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இதுதவிர மேலும் ஒரு சர்ப்ரைஸ் போட்டியாளர் இருப்பதாகவும் ரக்‌ஷன் ஹிண்ட் கொடுத்திருந்தார்.

44

அந்த போட்டியாளர் அடுத்த வார எபிசோடில் தான் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பல்வேறு தமிழ் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வரும் நடிகர் மைம் கோபி தான் அடுத்த வாரம் 10-வது போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... ஏய் சுழலி.. அழகி.! கருப்பு சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ப்ரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன்!!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலிகட்டும் மனோஜ்... காத்திருக்கும் செம ட்விஸ்ட்
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கும் அரசிக்கும் கல்யாணம்? அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்... செந்திலுக்கு மீனா வைத்த செக்!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved